பெற்றோர்கள் கவனத்திற்கு
பெற்றோர்கள் கவனத்திற்கு
இந்த காலகட்டத்தில் சமூகத்தில் 18 வயதிற்குட்பட்ட பெண் மற்றும் ஆண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்,பாலியல் வன்கொடுமை மற்றும் ஆபாச படங்கள் போன்ற குற்றங்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
அது மாதிரியான அபாயகரமான நிகழ்வுகளினால் அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியிலான பிரச்சனைகள் மட்டுமே வெளி சமூகத்திற்கு தெரிய வருகிறது.
ஆனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் மனரீதியான பிரச்சனைகள் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு மட்டுமே தெரிய வரும்.
பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு பெற்றோர்களால் ஆறுதல் மற்றும் அரவணைப்பு மட்டுமே கொடுக்க முடியும்.ஆனால்,இது மாதிரியான நிகழ்வுகளினால் பிள்ளைகளின் மனதில் ஆழமான காயத்தை உண்டு பண்ணிவிடுகிறது பாதிக்கப்பட்ட பிள்ளைகள் யாரைக் கண்டாலும் பயப் படுகிறார்கள்.மற்றவர்கள் சாதாரணமாக பார்த்தால் கூட தம்மை தான் ஏதோ கேலியாக பார்க்கிறார்களோ என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றும்
ஏதாவது அவர்களுக்குள் பேசிக்கொண்டால் கூட நம்மைப் பற்றி தான் பேசுகிறார்களோ என்ற எண்ணம் தோன்றும்
சமூகத்தில் எல்லோரையும் போல அவர்களால் இயல்பாக வாழ முடியவில்லை.அவர்களால் சரியாக தங்களை கவனித்துகொண்டு கல்வி பயிலும் முடிவதில்லை. அவர்களின்
எதிர்காலம் பற்றிய சிந்தனை கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.தன்னம்பிக்கையற்று வாழ்கிறார்கள். திருமண வாழ்வில் ஈடுபட இயலாமல் மனதில் சில அச்சங்கள் தோன்றி இயல்பான வா ழ் க் கை கேள்வி க் குறியாக மாறிவிடுகிறது
முன்பெல்லாம் பிள்ளைகள் பாலியல் வன்கொடுமை பாலியல் துன்புறுத்தல் போன்ற விஷயங்களால் மற்றவர்களால் பாதிக்கப்பட்டால் பெற்றோர்கள் அவர்களை குற்றம் இழைத்தவர்கள் போல நடத்துவார்கள். தற்போது ஓரளவுவுக்கு புரிந்து கொண்டு அவர்களை வழி நடத்த முனைகிறார்கள்.
இதற்கு காரணம் சரியான தீர்வு இந்த சமுதாயத்தில் கிடைப்பதில்லை. அசிங்கம் காரணமாக பெற்றோர்கள் சட்டத்தின் உதவியை நாடுவதில்லை.
பலமான சட்ட திட்டங்களும் அப்போது இல்லா த நிலை யில் அவ்வாறு இருந்து வந்தது. தற்போது பிள்ளைகள் பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ 18 வயதிற்குள் இருந்தால் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு பாலியல் வன்கொடுமை மற்றவர்களால் அவர்களுக்கு நடந்தால் அதை சட்டப்படி அணுக இன்றைய காலத்தில் சட்ட திட்டங்களும் அதற்கான தனி அமைப்புகளும் இன்று இருக்கிறது
ஆதலால் பாதிக்கப்பட்டவர்கள் பயந்து ஒதுங்கி விடாமல் நியாயத்திற்காக சட்டத்தின் மூலமாக போராட வேண்டும்.
அது மட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் மன காயத்தை அகற்ற சைக்காலஜிஸ்ட் ஆர் சைகாட்ரிஸ்ட் மூலமாக அவர்களின் அடிமனது காயங்களை அறிந்து தக்க ஆலோசனைகளை பெறலாம்.
நடந்த சம்பவத்திற்கு தாங்கள் பொறுப்பல்ல என்பதை உணர்ந்து செல்ப் டிஸ்க்ரிமினேட் பண்ண வேண்டியதில்லை பல வழிகளில் அவர்களின் அடி மனது காயங்களை போக்க ஆலோசனை கள் பெறலாம்
இதனால் அவர்கள் முழு தைரியத்துடன் சமுதாயத்தில் நடமாட முடியும்.
பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் ரகசியங்கள் அரசு அதிகாரிகளாலும் சட்ட வல்லுனர்களாலும் பாதுகாக்கப்படும்.அதை யாரேனும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினால் அவர்களையும் சட்டப்படி தண்டிக்க இடம் இருக்கிறது.
ஆண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் அந்த பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளை மதிக்க கற்றுத் தர வேண்டும் கண்ணியமாக நடத்த கற்றுத் தர வேண்டும் தன் உடன் பிறந்த சகோதரிகள் மட்டுமில்லாமல் சமுதாயத்தில் உள்ள மற்ற பெண்களையும் தன் உடன் பிறந்த சகோதரிகளாக பாதிக்க சொல்லித் தர வேண்டும்.
இன்றைய அவசர சூழலில் கணவன் மனைவி இருபாலாரும் அலுவலகம் செல்லும் நிலை உள்ளதால் பிள்ளைகளிடம் அதிக நேரம் செலவிட முடியாமல் போய்விடுகிறது அப்படிப்பட்ட கணவன் மனைவிகள் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் பள்ளி சென்று வந்த பிள்ளைகளிடம் நிறைய உரையாட வேண்டும் அன்றைய டே டுடே லைஃபில் நடந்த அனைத்து விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.அவர்களில் உடலில் ஏதாச்சும் காயம் இருந்தால் அந்த காயம் எவ்வாறு ஏற்பட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும் அவர்களின் அன்றாட நடவடிக்கை மாறியுள்ளதா எப்போதும் போலதான் அவர்கள் நடந்து கொள்கிறார்களா என்று தெரிந்து கொள்ள வேண்டும்
பிள்ளைகளுக்கு தெரியாமல் பள்ளிக்குச் சென்று அவர்களின் தினசரி நடவடிக்கை என்னவென்று ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி நாம் நம் பிள்ளைகளை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலும் சிறு பிள்ளைகளுக்கு எதிரான செக்ஸுவல் ஆர்எஸ்மண்ட் (sexual harrasment )பிள்ளைகளின் உற்றார் உறவினர்களாலும் பெற்றோர்களின் நண்பர்களினாலும் மற்றும் அண்டை வீட்டார்களாலும் அதிகபட்சம் நடைபெறுகிறது ஆதலால் பெற்றோர்கள் பிள்ளைகளை யாரை நம்பியும் தனியே விட்டுச் செல்லக்கூடாது. பிள்ளைகளின் அன்றாட வாழ்வியலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஐயத்துடனே கண்காணிக்க வேண்டும்.
மேற்கத்திய நாடுகளில் பள்ளி ஆசிரியர்கள் விளையாட்டு ஆலோசகர் பள்ளி வாகனம் ஓட்டுபவர்கள் பள்ளி காவலாளிகள் பள்ளி துப்புரவு பணியாளர்கள் பள்ளித் தோட்ட வேலை செய்பவர்கள் டாக்ஸி டிரைவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் வீட்டு காவலாளிகள் மற்றும் பிள்ளைகளில் அன்றாடம் சந்திக்கும் அனைத்து வேலை செய்பவர்களையும் பரீட்சித்து அவர்கள் தகுதியானவர்கள் என தகுதிச் சான்றிதழ் வழங்க தனியான அமைப்புகள் உள்ளது. அவர்கள் பிள்ளைகளுக்கு எதிராக குற்றவியலில் ஈடுபட்டால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்கள்
அதுமட்டுமில்லாமல் அவர்கள் எதிர்காலத்தில் சிறுபிள்ளைகள் சம்பந்தப்பட்ட எந்தவித பணியிலும் அமர்த்தப்பட மாட்டார்கள்.மேலும் அவர்களுக்கு என குற்றவியல் ரிஜிஸ்டரில் என்ட்ரி செய்யப்பட்டு அவர்களை தீவிரமாக கண்காணிக்கப்படுவர்.நம் நாட்டிலும் இது மாதிரியான பிள்ளைகள் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்களை கண்காணிக்க தனிப்பட்ட அமைப்பு இருந்தால் பிள்ளைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது
. சிறுபிள்ளைகள் பூக்களைப் போன்று மென்மையானவர்கள்.அவர்களை ரசிக்கலாமே தவிர நுகரவோ பறிக்கவோ கசக்கி தூக்கி எறியோ கூடாது சில மனித உருவில் இருக்கும் மிருகங்களுக்கு சட்டப்படி இதை உணர்த்த வேண்டும்.
-Divanya Prabhakaran