இயக்குனர் வெற்றிமாறனின் திரை பண்பாடு ஆய்வகம்

 இயக்குனர் வெற்றிமாறனின் திரை பண்பாடு ஆய்வகம்

இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் “நாம் அறக் கட்டளையின் சார்பாக திரை – பண்பாடு ஆய்வ கத்தை (International institute of film and culture) துவக்கியுள்ளார் .

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாண விகளுக்கு நுழைவு தேர்வு வைத்து  அவர்களின்
வீடுகளுக்கு நேரடியாக சென்று, உண்மையி லேயே சமூகத்தால்  புறக்கணிக்கப்பட்டு, ஒடுக் கப்பட்டு, பொருளாதாரத்தில்  பின்தங்கிய நிலை யில் விளிம்புநிலை மனிதர்களாக, முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா? தனது வலியை, தனது பண்பாட்டை ஊடகங் களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்து அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ, மாணவி களுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளை கட்டணமில்லாமல் ஏற்பாடு செய்து ஊடகத்துறையில் மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இந்நிறுவனத்தை உருவாக்கி இருக் கிறார்.

இந்நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சியின் போது கலைப்புலி S  தாணு அவர்கள் முதல் நபராக ஒரு கோடி ரூபாய் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்திரவேல் அவர்களிடம் கொடுத்து, இந்நிறுவ னத்தில் படிக்கும் மாணவர் மாணவிகளுக்கு வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவர் களுக்கு தனது  V Creations நிறுவனத்தில்   படத் தை இயக்கும் வாய்ப்பு தரப்படும் என்று அறிவித் தார் .
“நாம் அறக்கட்டளையை சார்ந்த பொறுப்பாளர் கள் ஆர்த்தி வெற்றிமாறன், வெற்றி துரைசாமி மற்றும் பாட திட்டத்தை வடிவமைத்த முன்னாள் பேராசிரியர்  ஃபாதர் ராஜா நாயகம் (லயோலா கல்லூரி) அவர்களும் உடன் இருந்தார்கள் .

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...