இல்லம் தேடிக் கல்வித் திட்டம் (திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாடு)

உலகம் இதுவரை எத்தனையோ பேரிடர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த உலகும் சிறைபிடிக்கப்பட்டது போன்ற வரலாறு கிடையாது.

இவையெல்லாம் கொரோனா என்கிற பெயரை உச்சரிக்கும்வரை வரலாறாக இருந்தது. ஆனால் கொரோனா வந்த பிறகு ஒட்டுமொத்த உலகும் பாதிக்கப்பட்டது. மிக முக்கியமாக கல்விமீதான  பாதிப்பு என்பது மிகக் கடுமையானதாக இருந் தது. ஏனெனில் ஏனைய பாதிப்புகள் எல்லாம்  பொருளாதாரம் சார்ந்த பாதிப்புகள். இவற்றை உழைப்பின் மூலமோ, நிதியின் மூலமோ சரி செய்துவிட முடியும். ஆனால் கல்வியின் மீதான பாதிப்பு என்பது வருங்காலத் தலைமுறை மீதான பாதிப்பாகும். அதனை நிதி கொண்டோ, பொருள்கொண்டோ சரிசெய்ய முடியாது.

எந்த வடிவிலேனும் கல்வியைக் கொடுத்தே கற் றல் இழப்பைச் சரிசெய்ய முடியும் என்னும் சூழலில் உலகமே  இணையவழியில்  கல்வியைக் கொடுக்கப் போராடிக் கொண்டிருந்த சூழலில், இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகிற்கே முன் னோடியாக இல்லம் தேடிக் கல்வி என்னும் ஓர் அற்புதமான திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமு கப்படுத்தியது.

எந்தத் திட்டத்திற்கும் இல்லாத சிறப்பு, அப்படி யென்ன இந்தத் திட்டத்திற்கு மட்டும் உள்ளது என்ற கோணத்தில் பார்த்தால்,  எந்தச் சூழ்நிலை யிலும் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்னும் ஒற்றை நோக்கத்தை முன்வைத்து மாணவர் களைத் தேடி, அவர்கள் வாழுமிடங்களிலேயே கல்விக்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்கிற வகையில் திட்டமிட்டு, இத்திட்டம் வடிவ மைக்கப்பட்டதும், கொரோனா காலத்தில் ஏற் பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யவும் இதுவரை 181000 தன்னார்வர்களை களத்தில் இறக்கிச் சாதித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

இதனை ஒரு சராசரித் திட்டமாக அணுகாமல், தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறைக்கான திட்டமாகக் கருதியதால்தான் இத்திட்டத்திற் கென தனி அலுவலராக திரு.இளம்பகவத் இ.ஆ.ப அவர்களை நியமித்து இத்திட்டத்தின் முழு வெற்றிக்கான முனைப்பை முன்னெடுத்திருக் கின்றது தமிழ்நாடு அரசு.

பள்ளிக்கு வர வாய்ப்பில்லாதவர்களுக்காக என் றில்லாமல்,  பள்ளியில் பயிலும்  1 முதல் 8 வரை யிலான அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக் கும் அடிப்படைக் கல்வியை வழங்கிடும் உறுதி யோடு, தொடக்க நிலை மற்றும் நடுநிலை என இரு பிரிவாகத் தன்னார்வலர்களைத் தேர்ந் தெடுத்து முழு அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வி யைக் கரைசேர்க்கும் முடிவோடு களத்தில் இறக் கியிருக்கின்றது இல்லம் தேடிக் கல்வித் திட்டம்.

ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்குத் தன்னார்வலர் கள் கிடைப்பார்களா என எல்லோரும் யோசித் துக்கொண்டிருந்த வேளையில் நாங்கள் ஊதியத் திற்காக வரவில்லை. அர்ப்பணிப்பு உணர்வோடு மாணவர்கள் கடந்த ஈராண்டுகளில் இழந்த கல்வியை மீட்டெடுப்பதற்காக வந்திருக்கின் றோம் என 181000 தன்னார்வலர்கள் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் இணைந்திருப்பது பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகின்றது.

ஏனெனில்  ஊதியத்தை ஒரு பொருட்டாகக் கரு தாமல் தினமும் இரண்டு மணி நேரம் ஒதுக்கி, அரசுப் பள்ளி மாணவர்களின் அடிப்படைக் கல்வியை உறுதிப்படுத்தவும், வலுப்படுத்தவும் தாங்கள் சார்ந்த பகுதிகளில் அரசோடு கை கோர்த்திருக்கும் தன்னார்வலர்களை வணக்கத் திற்குரியவர்களாகவே பார்க்க வேண்டியிருக் கிறது.

மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக கற்றல் உப கரணங்கள் தயாரிப்பு,அறிவியல் கண்காட்சி  ஆடல், பாடல், விளையாட்டு என மாலை நேர வகுப்புகள் மகிழ்வான வகுப்பறைகளாகக் காட் சியளித்துக் கொண்டிருக்கின்றன.

அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுடைய பெற்றோர் பெரும்பாலும் தனது குழந்தைகளது கல்வியில் பெரும் அக்கறை செலுத்த இயலாத நிலையில்தான் பெரும்பாலும் காணப்படுகின் றனர்.

பள்ளியில் ஏற்படும் சந்தேகங்களை மறுமுறை கேட்டுத் தெளிவுறும் வாய்ப்பு அரசுப் பள்ளியில் பயிலும்  அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைப் பதில்லை. ஆனால் இல்லம் தேடிக் கல்வித்திட்டம் வந்த பிறகு தனது வீட்டின் அருகிலேயே கற்றல் மையங்கள் செயல்படுவதாலும், தான் நன்கு அறிந்த தனது சுற்றத்தில் உள்ள ஒருவரே தன்னார்வலராக செயல்படுவதாலும்

தயக்கமுன்றி தன் சந்தேகங்களைக் கேட்டுத்  தெளிவுறும் வாய்ப்பு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்குக் கிடைத் துள்ளது. அத்துடன் கொரோனா கால இடை வெளியில் கற்பிக்க முடியாத பாடங்களை ஆசிரியர் தற்போது கற்பிக்க வாய்ப்பில்லாமல் இருக்கின்றது. ஏனெனில் அவர்களால் நடப்பு ஆண்டிற்குரிய பாடப்பகுதியை மட்டுமே நடத்து வதற்கு நேரம் இருக்கின்றது.

ஆனால் இடையில் ஏற்பட்ட கற்றல் இடை வெளியை நிரப்புவது யார்?

அந்த அடிப்படைத் திறன்களை மீட்டெடுக்கப் போவது யார்? என்னும் வினாக்களை எல்லாம் எழுப்பினால், நிச்சயமாக அந்தப் பெரும் பொறுப்பை ஏற்று, அதனை நோக்கி வெற்றிகர மாகச் சென்றுகொண்டிருப்பவர்கள் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தன்னார்வலர்களே!

வழக்கமான பள்ளிக் கல்வியில் கூட 30 மாணவர் களுக்கு ஓர் ஆசிரியர் என்னும் நடைமுறைதான் வழக்கத்தில் உள்ளது.

ஆனால் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் , அவர்களது வருகையைக் கண்காணிக்க ஆன்லைனில் வருகைப் பதிவு என மாணவர்களின் 100% தவ றாத வருகைக்காக பம்பரமாகச் சுழன்று செய லாற்றிக் கொண்டிருக்கின்றார் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தின் சிறப்பு அலுவலரும் இந்திய ஆட்சிப் பணியாளருமான இளம்பகவத்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் எப்படியேனும் அரசுப் பள்ளி மாணவர்களின் குறைந்தபட்ச கற்றல் அடைவுகளை உறுதி செய்துவிட வேண் டும் என்னும் உறுதியோடு பயணிக்கின்றார்.

இதற்காக  கல்வியின் மீது அக்கறை உள்ள, சமூக மேம்பாட்டுக்கான களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற சமூகப்பணி அமைப்புகளையும் இத்திட் டத்தில் இணைத்து இல்லம் தேடிக் கல்வித் திட் டத்தின் பயணத்தை வலுப்படுத்திக் கொண் டிருக்கின்றார்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்கு கடந்த நிதி நிலை அறிக்கையில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு,  தற்போதைய நிதிநிலை அறிக்கையிலும்  200 கோடி ரூபாயை மேலும் ஒதுக்கீடு செய்திருக்கின்றது.

பள்ளிகள் இயல்பாக செயல்படத் தொடங்கிய பின்னும் ஏன் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடர வேண்டும் எனக் கேள்வி எழுப்பினால், காரணம் மிகச் சரியாக இருக்கின்றது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட கற்றல் இடை வெளி என்பதும், கற்றல் பாதிப்பு என்பதும் அதனது தாக்கத்தை ஆராயும்பொழுது, பாதிப் பின் வீச்சு மிகப்பெரியதாக உள்ளது.

உயர்நிலை, மேல்நிலை என்னும்பொழுது மாண வர்கள் எப்படியேனும் தங்களைத் தயார் செய்து கொள்ள வாய்ப்புக் கிடைத்து விடும். ஆனால் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் என்பவை கல்வி யின் அடித்தளமாகத் திகழ்பவை.

 மாணவர்களது கற்றல் இங்கு பாதிக்கப்பட்டால் அது வரும் நாட்களில் அவர்களது உயர்கல்வியை மட்டுமல்ல, அவர்களது எதிர்காலத்தையே பாதிப் படையச் செய்யும்.

 எனவே அவர்களது கற்றல் இழப்பைச் சரிசெய்ய இல்லம் தேடிக் கல்வி திட்டம் இந்த 6 மாதங்கள் அல்ல, இன்னும் ஓர் ஆண்டு நீட்டித்தாலும் அது சரியான ஒன்றாகவே இருக்கும். 

ஏனெனில் ஈராண்டுகால முழுமையான கற்றல் இழப்பை 6 மாதங்களில்  மீட்டெடுப்பது என்பது சவாலானது அல்லவா! எனவே கற்றல் இழப்பு என்பது சரிசெய்யப்படும் வரை இத்திட்டத்தின் காலம் நீட்டிக்கப்படுதலும் அவசியமே. பள்ளி யில் பயிலும் மாணாக்கர்களே இல்லம் தேடிக் கல்வித்திட்டலும் இணைந்து பயில்வதால்,  மாண வர்களை நன்கு அறிந்த ஆசிரியர்கள் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு மாணவர்களது கற்றல் நிலை குறித்த விவரங் களைப் பகிர்ந்துகொண்டு சம்பந்தப்பட்ட இல் லம் தேடிக் கல்வி மையங்களோடு தொடர்பில் இருந்தால்,

கொரோனா காலத்தில் ஏற்பட்ட மாணவர்களு டைய கற்றல் இழப்பு என்பதைச்  சரி செய் யப்படக்கூடிய வாய்ப்பு விரைவில் ஏற்படும். கல்விக்கு கொரோனா சாபம் என்றால், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் வரம்.

சிகரம் சதிஷ்

எழுத்தாளர்- ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!