இன்றைய ராசி பலன்கள் – 17.04.2022

 இன்றைய ராசி பலன்கள் – 17.04.2022

ராசி- பலன்கள்

🔯 மேஷம் -ராசி: 🐐
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். நண்பர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். போட்டி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

⭐️அஸ்வினி : குழப்பம் ஏற்படும்.
⭐️பரணி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
⭐️கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
════════════════

🔯 ரிஷபம் -ராசி: 🐂
உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
⭐️ரோகிணி : கவனம் வேண்டும்.
⭐️மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
════════════════

🔯 மிதுனம் -ராசி: 👫
குடும்ப உறுப்பினர்களின் செயல்பாட்டால் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். நீண்ட நாள் கனவை நடைமுறைப்படுத்த முயல்வீர்கள். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான சூழல் ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

⭐️மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.
⭐️திருவாதிரை : அனுகூலம் உண்டாகும்.
⭐️புனர்பூசம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
════════════════

🔯 கடகம் -ராசி: 🦀
மனை தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். புதிய தொழில் முயற்சியில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே ஒற்றுமை மேம்படும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
⭐️பூசம் : அனுகூலமான நாள்.
⭐️ஆயில்யம் : ஒற்றுமை மேம்படும்.
════════════════

🔯 சிம்மம் -ராசி: 🦁
மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். நெருக்கமானவர்களின் உதவியால் மேன்மை உண்டாகும். ஆவணம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மேன்மையான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்.

⭐️மகம் : பிரச்சனைகள் குறையும்.
⭐️பூரம் : விழிப்புணர்வு வேண்டும்.
⭐️உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.
════════════════

🔯 கன்னி -ராசி: 🧛‍♀️
தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

⭐️உத்திரம் : சேமிப்பு அதிகரிக்கும்.
⭐️அஸ்தம் : தடைகள் குறையும்.
⭐️சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.
════════════════

🔯 துலாம் -ராசி: ⚖
பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய ஆராய்ச்சி சார்ந்த தேடல் அதிகரிக்கும். புதிய நபர்களால் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். நிர்வாகத்தில் தனித்திறமை வெளிப்படும். இன்பம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️சித்திரை : தேடல் உண்டாகும்.
⭐️சுவாதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
⭐️விசாகம் : தனித்திறமை வெளிப்படும்.
════════════════

🔯 விருச்சிகம் -ராசி: 🦂
எதிர்பார்த்த வெளியூர் தொடர்பான புதிய வாய்ப்புகள் கைகூடும். பொருளாதாரம் தொடர்பான எதிர்பார்த்த சில உதவி கிடைக்கும். உறவினர்களுடன் பேசும் பொழுது பொறுமை வேண்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். எடுத்த வேலைகளை முடிப்பதற்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். நன்மையான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️விசாகம் : வாய்ப்புகள் கைகூடும்.
⭐️அனுஷம் : பொறுமை வேண்டும்.
⭐️கேட்டை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
════════════════

🔯 தனுசு -ராசி: 🏹
மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதுவிதமான ஆசைகள் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மதிப்பு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️மூலம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️பூராடம் : நெருக்கடிகள் குறையும்.
⭐️உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
════════════════

🔯 மகரம் -ராசி: 🐴
நண்பர்களின் வட்டாரத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். சொத்துக்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய ஆடை, ஆபரணம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.

⭐️உத்திராடம் : மதிப்பு அதிகரிக்கும்.
⭐️திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.
⭐️அவிட்டம் : எண்ணங்கள் உண்டாகும்.
════════════════

🔯 கும்பம் -ராசி: ⚱
உடன்பிறந்தவர்களிடத்தில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. திறமை வெளிப்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு.

⭐️அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
⭐️சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐️பூரட்டாதி : கருத்துக்களை தவிர்க்கவும்.
════════════════

🔯 மீனம் -ராசி: 🐠
புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வேகமின்றி விவேகத்துடன் செயல்படவும். பழைய நினைவுகளால் மன அமைதியின்மை ஏற்படும். கோபத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

⭐️பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
⭐️உத்திரட்டாதி : அமைதியின்மை ஏற்படும்.
⭐️ரேவதி : விரயங்கள் உண்டாகும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...