’டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு 7 கோடியில் பிரம்மாண்ட செட் | கோலிவுட் கோகிலா

 ’டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு 7 கோடியில் பிரம்மாண்ட செட் | கோலிவுட் கோகிலா

படத்தின் தொடக்க விழா அன்று வெளியிடப்பட்ட டைட்டில் மற்றும் ப்ரி லுக் போஸ்டர்கள் மூலமே பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள ‘டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு ரூ. 7 கோடியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது.

மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் முதல் பான் இந்தியா படமான ‘டைகர் நாகேஷ்வரராவ்’ படத்தை வம்சி இயக்கவுள்ளார். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் கனவுப்படமான இதை அவரது அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது இப்படத்தின் பிரி புரடக்‌ஷன் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ள நிலையில் 70 களில் இருந்த ஸ்டூவர்ட்புரம் கிராமத்தை சித்தரிக்கும் வகையில் ரூ 7 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது.. 70 களீல் மிகவும் அறியப்பட்ட, ஸ்டூவர்ட்புரத்தைச் சேர்ந்த பிரபல திருடனான டைகர் நாகேஷ்வரராவின் வாழ்க்கைச் சித்திரமே இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாநதி, ஜெர்சி, எவரு, ஷியாம் சிங்க ராய் போன்ற பல சூப்பர்ஹிட் படங்களுக்கு முன்பு பணியாற்றிய தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா, 70களில் ஸ்டூவர்ட்புரத்தை சித்தரிக்கும் அந்த பிரம்மாண்டமான செட் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டு வருகிறார். 7 கோடி மதிப்பிலான அந்த செட் ஷம்ஷாபாத் அருகே 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு வருகிறது.

இப்படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் ரவி தேஜாவின் உடல்மொழி, வசன உச்சரிப்பு, அவரது தோற்றம் ஆகியவை முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும். அவர் முன்னெப்போதும் இதுபோன்ற பாத்திரத்தில் நடித்ததில்லை என்பதால் கூடுதல் ஆர்வத்துடன் காத்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது.

ஆர் மதி ஐ.எஸ்.சி ஒளிப்பதிவு செய்ய, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளர். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதுகிறார், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

 

நடிகர்கள்: ரவி தேஜா, நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் மற்றும் பலர்
எழுத்தாளர், இயக்குனர்: வம்சி
தயாரிப்பாளர்: அபிஷேக் அகர்வால்
பேனர்: அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்
வழங்குபவர்: தேஜ் நாராயண் அகர்வால்
இணை தயாரிப்பாளர்: மயங்க் சிங்கானியா
வசனங்கள்: ஸ்ரீகாந்த் விசா
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார்
DOP: ஆர் மதி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
PRO: யுவராஜ்

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...