இன்றைய ராசி பலன்கள் – 16.04.2022

 இன்றைய ராசி பலன்கள் – 16.04.2022

ராசி- பலன்கள்

மேஷம்

தொழில் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : முயற்சிகள் ஈடேறும்.
பரணி : சேமிப்பு அதிகரிக்கும்.
கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.
—————————————

ரிஷபம்

மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். உடனிருப்பவர்களை பற்றியும், உலக வாழ்க்கை பற்றியும் புரிதல் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தவறிய சில மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தடைகள் அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : தெளிவு பிறக்கும்.
ரோகிணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
—————————————

மிதுனம்

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
—————————————

கடகம்

உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். முக்கியமான சில விஷயங்களுக்கு முடிவு எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய முயற்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்வான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : ஆதரவான நாள்.
பூசம் : இழுபறிகள் குறையும்.
ஆயில்யம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
—————————————

சிம்மம்

நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் செய்யும் மாற்றங்களுக்கு ஏற்ப பாராட்டும், ஆதரவும் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.
உத்திரம் : குழப்பம் நீங்கும்.
—————————————

கன்னி

நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த வழக்கு சார்ந்த பணிகளுக்கு தீர்வு கிடைக்கும். சாதுர்யமாக செயல்பட்டு மனதில் இருக்கக்கூடிய எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆதரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திரம் : ஒற்றுமை ஏற்படும்.
அஸ்தம் : தீர்வு கிடைக்கும்.
சித்திரை : மாற்றமான நாள்.
—————————————

துலாம்

மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மற்றவர்களின் கருத்துக்களால் உங்கள் இலக்குகளில் தடுமாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

சித்திரை : ஆசைகள் அதிகரிக்கும்.
சுவாதி : தடுமாற்றமான நாள்.
விசாகம் : ஆர்வம் உண்டாகும்.
—————————————

விருச்சிகம்

கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சியும், தனவரவும் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். உத்தியோகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்படவும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

விசாகம் : லாபம் அதிகரிக்கும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : கவனத்துடன் செயல்படவும்.
—————————————

தனுசு

எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சில காரியங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மூலம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூராடம் : ஒத்துழைப்பு மேம்படும்.
உத்திராடம் : அனுகூலமான நாள்.
—————————————

மகரம்

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றம் உண்டாகும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செல்வாக்கு உயரும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவோணம் : சேமிப்பு அதிகரிக்கும்.
அவிட்டம் : மேன்மையான நாள்.
—————————————

கும்பம்

கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உங்களின் மீது சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்களில் எதிர்பார்ப்புகள் காலதாமதமாக நிறைவேறும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.
—————————————

மீனம்

தடைபட்டு வந்த தனவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களுடன் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். அமைதியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : வரவு மேம்படும்.
உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
ரேவதி : விருப்பம் நிறைவேறும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...