Tags :சோழ. நாகராஜன்

3D பயாஸ்கோப்

கலைவாணர் எனும் மாகலைஞன் – 10 – சோழ. நாகராஜன்

10 ) முதல் சினிமா வாய்ப்பிலேயே முழங்கிய உரிமைக்குரலும்… உலகமே வியக்க, உலகம் முழுதும் சினிமா பேசத்தொடங்கிய அந்த அதிசயப் பொழுதென்பது கலை உலக வரலாற்றில் அழுத்தமாகக் குறிக்கத்தக்கதாகவே இருந்தது. அதற்கு முன்னர் சினிமா பேசாமல், ஒலியேதும் எழுப்பாமல் மௌனப்படமாக மட்டுமே பெரும்பாலும் மக்கள் நன்கு அறிந்திருந்த புராணக் கதைகளையே எடுத்தார்கள். பேசாத சினிமாக்களை ரசிகர்கள் பார்த்துப் புரிந்துகொள்ள அவர்களுக்குத் தெரிந்த கதைகளைப் படமாக்குவது அன்றைய அவசியத் தேவையாக இருந்தது. அல்லது சண்டைகள் நிறைந்த மேற்கத்திய பாணி […]Read More

3D பயாஸ்கோப்

கலைவாணர் எனும் மாகலைஞன் – 8 – சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 8 ) தேசபக்தி: நாட்டு விடுதலையைப் பேசிய நாடகம்… ———————————— டி.கே. முத்துச்சாமிக்கும் என்.எஸ். கிருஷ்ணனுக்கும் “தேசபக்தி” – என்று பெயர் மாற்றப்பட்ட சாமிநாத சர்மாவின் “பாணபுரத்து வீரன்” – என்ற அந்த நாடகத்தில் புதுமையாக ஏதாவது சேர்க்க வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கியிருந்தது. இருவரும் ஒருநாள் புத்தகக் கடைக்குச் சென்றார்கள். மகாத்மா காந்தியின் வரலாற்று நூலை வாங்கிவந்தார்கள். காந்தியடிகளின் கதையை வில்லிசை வடிவில் இந்த நாடகத்தில் இணைத்துப் பாடலாம் என்று […]Read More

3D பயாஸ்கோப்

கலைவாணர் எனும் மா கலைஞன் – 6 – சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 6 ) நடிகவேள் போற்றிய ஜெகந்நாத ஐயர்… டி.கே.எஸ். குழுவில் இரத்னாவளி, இராஜேந்திரன், சந்திரகாந்தா என்று நாடகங்கள் தொடர்ந்தன. அவற்றில் கிருஷ்ணனுக்கு முக்கிய வேடங்களும் கிடைத்தன. நாடகங்களில் நடிக்க சிறுவர்களை அழைத்துவருகிற வேலையைச் செய்துவந்த டி.கே.எஸ். சகோதரர்களின் தாய்மாமன் செல்லம்பிள்ளையுடன் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு ஏதோவொரு விசயத்தில் கருத்து முரண்பாடு வந்துவிட்டது. கிருஷ்ணனால் தொடர்ந்து அங்கே இருக்க இயலவில்லை. எனவே, இன்னொரு பிரபல நாடகக் குழுவான மதுரை பால மீனரஞ்சனி சங்கீத […]Read More

3D பயாஸ்கோப்

கலைவாணர் எனும் மா கலைஞன் – 5 – சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 5) அந்நாளின் சகலகலாவல்லவன்…   அனுசுயா என்றொரு நாடகம். டி.கே.எஸ். சகோதரர்கள் புதுக்கோட்டைக்கு அருகிலிருக்கும் திருமயத்தில் முகாமிட்டிருந்தபோது நடத்திய நாடகம்தான் இந்த அனுசுயா. இதில் கிருஷ்ணனுக்கு ராஜா வேடம். அந்த அரசன் பெயரில்லாமல் இருந்தான். அவனைக் குறிப்பிடுகையில் நாடகக் குழுவினர் இருட்டு ராஜா என்றே குறிப்பிட்டார்கள். குழுவின் மூத்தவரான டி.கே. சங்கரன்தான் கிருஷ்ணனின் பயிற்சியாளர். “என்ன ஆச்சரியம் இது – ஆகா என்ன ஆச்சரியம் இது…” – என்று இருட்டு ராஜா […]Read More

3D பயாஸ்கோப்

கலைவாணர் எனும் மா கலைஞன் – 4 – சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 4) இன்று நாஞ்சில்நாட்டின் பெருமை நாளை தமிழகத்தின் பெருமை… ‘கோவலன்’. டிகேஎஸ். குழுவினர் 1925 மார்ச் 31 அன்று அரங்கேற்றிய முதல் நாடகம்தான் அது. கலைவாணர் ஏற்ற முதல் வேடம் பாண்டியன் நெடுஞ்செழியன். பிறகு சாவித்திரி நாடகத்தில் துயுமத்சேனன் பாத்திரம். மனோஹராவில் பௌத்தாயணன் வேடம். அப்புறம் அரங்கேறிய அபிமன்யூ சுந்தரி நாடகத்தில் கிருஷ்ணனுக்கு தொந்திச் செட்டி வேடம். இப்படி தானொரு தவிர்க்க இயலாத கலைஞராக வளர்ந்துவந்தார் கிருஷ்ணன். தொடர்ந்து அவருக்கு வயதான […]Read More

3D பயாஸ்கோப்

கலைவாணர் எனும் மா கலைஞன் – 3) படிக்கவந்த அன்றே ஆசிரியரான மாணவன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 3) படிக்கவந்த அன்றே ஆசிரியரான மாணவன்… நாடகமே அந்நாளின் முதல்பெரும் பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. அன்று சினிமா இருந்தாலும் அது பேசவில்லை. பேசாப்பட யுகத்தில் நாடக நடிகர்களுக்குமே அதன்பேரில் ஆர்வம் இருக்கவில்லை. புகைப்படம் சலனப்படம் ஆன நிலையில் அசையும் படத்தை மக்கள் ஆர்வமாகப் பார்த்தார்கள் என்றாலும் நாடகம் வழங்கிய கலை அனுபவத்தை சினிமாவால் வழங்கவே இயலவில்லை அப்போது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தன் இளமைக் காலத்தில் நாடகத்தில் நடிக்கவே பெரும் ஆர்வம் […]Read More

3D பயாஸ்கோப்

கலைவாணர் எனும் மா கலைஞன் – 2 – சோழ. நாகராஜன்

2 ) எளிமையாய்ப் பிறந்த பிறவிக் கலைஞன்…   தமிழகத்தின் தென்கோடியில் இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தின் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள சிற்றூர் ஒழுகினசேரி. நீர்வளம் மிக்க இந்த ஊரில் வேளாண் தொழில் செழித்தோங்கியிருந்தது. குமரி மாவட்டத்தின் தோவாளை, அகஸ்தீஸ்வரம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பை நாஞ்சில்நாடு என்று அழைப்பார்கள்.  ஒழுகினசேரியும் இந்த நாஞ்சில்நாட்டைச் சேர்ந்ததுதான். இந்தப் பகுதி முழுவதும் அந்நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டதாக, மலையாள தேசமாக இருந்தது. இங்கு தமிழும் மலையாளமும் பேசு மொழிகளாக […]Read More

3D பயாஸ்கோப்

கலைவாணர் எனும் மா கலைஞன் – 1 – சோழ. நாகராஜன்

மனிதப் பிறவியின் தனிச் சிறப்பு எதுவென்று ஒரு கேள்வியைக் கேட்டால் நம்மில் எத்தனை பேர் அதற்குச் சரியான பதிலைச் சொல்லிவிடுவோம் என்பது தெரியாது. ஆனால், ஒரேயொரு தமிழ்க் கலைஞர் மட்டும் மனிதப் பிறவியின் சிறப்பு என்னவென்று கேட்டு, அதற்கொரு இலக்கணமே சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். முதலில் அவர் நம்மிடமே ஒரு கேள்வியைக் கேட்கிறார் இப்படி – மனிதன் எந்த வகையில் உயர்ந்தவன்? அவன் அழகாக இருக்கிறான் என்பதாலா? அவன் அறிவாளி என்பதாலா? அவன் மிகப் பெரிய பணக்காரன் என்பதாலா? […]Read More