12-ஆம் வகுப்புதேர்ச்சி விகிதத்தில் 97.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்..!

 12-ஆம் வகுப்புதேர்ச்சி விகிதத்தில் 97.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்..!

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.45% பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளது.  90.47% தேர்ச்சி விகிதத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது.  சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.  விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 2-இல் தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில்,  ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.  மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை http://www.tnresults.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்தார்.

இந்நிலையில்,  பள்ளிக்கல்வி தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்ட தேர்வு முடிவுகளின்படி திருப்பூர் மாவட்டம் 97.45% தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தார் போல் இரண்டாம் இடத்தை ஈரோடும்,  சிவகங்கையும் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 97.42% மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

இதே போன்று 97.25% தேர்ச்சி விகிதத்துடன் அரியலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இதன்படி மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:

மாவட்டம்                          தேர்ச்சி விகிதம்

திருப்பூர்                                    – 97.45%

ஈரோடு                                       – 97.42%

 சிவகங்கை                             – 97.42%

அரியலூர்                                – 97.25%

கோயம்புத்தூர்                   – 96.97%

விருதுநகர்                              – 96.64%

பெரம்பலூர்                           – 96.44%

திருநெல்வேலி                    – 96.44%

தூத்துக்குடி                           – 96.39%

நாமக்கல்                               – 96.10%

தென்காசி                             – 96.07%

கரூர்                                         – 95.90%

திருச்சி                                    – 95.74%

கன்னியாகுமரி                – 95.72%

திண்டுக்கல்                       – 95.40%

மதுரை                                   – 95.19%

ராமநாதபுரம்                    – 94.89%

செங்கல்பட்டு                   – 94.71%

தேனி                                      – 94.65%

சேலம்                                    – 94.60%

சென்னை                            – 94.48%

கடலூர்                                   – 94.36%

நீலகிரி                                   – 94.27%

புதுக்கோட்டை                – 93.79%

தருமபுரி                               – 93.55%

தஞ்சாவூர்                            – 93.46%

விழுப்புரம்                          – 93.17%

திருவாரூர்                           – 93.08%

கள்ளக்குறிச்சி                  – 92.91%

வேலூர்                                    – 92.53%

மயிலாடுதுறை                 – 92.38%

திருப்பத்தூர்                        – 92.34%

ராணிப்பேட்டை                – 92.28%

காஞ்சிபுரம்                           – 92.28%

கிருஷ்ணகிரி                       – 91.87%

திருவள்ளூர்                           – 91.32%

நாகப்பட்டினம்                    – 91.19%

திருவண்ணாமலை          – 90.47%

மொத்தம் – 94.56%

புதுச்சேரி
93.38%

காரைக்கால்
87.03%

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...