பிரதமர் நரேந்திர மோடி டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார்..!

 பிரதமர் நரேந்திர மோடி டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார்..!

பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருதை வழங்கி அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலின்போது அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தியா மருந்து பொருட்களை வழங்கி உதவியது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் இந்தியா, டொமினிகாவுக்கு 70,000 டோஸ் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கியது. அத்துடன், டொமினிகாவின் சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா உதவிகளை அளித்தது.

இதற்காக டொமினிகா மற்றும் இந்தியா இடையேயான நட்புறவை பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டுக்காகவும், பிரதமர் நரேந்திர மோடியை கௌரவிக்க டொமினிகா அரசு முடிவு செய்தது. அதன்படி, நாட்டின் உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க உள்ளதாக டொமினிகா அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில், கயானாவின் ஜார்ஜ் டவுனில் இந்தியா-காரிகாம் உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது காமன்வெல்த் தலைவர் டொமினிகா சில்வானி பர்ட்டன் பிரதமர் நரேந்திர மோடிக்கு, டொமினிகா விருதை வழங்கி கௌரவித்தார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...