அதானி குழுமத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது அமெரிக்கா..!

 அதானி குழுமத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது அமெரிக்கா..!

இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் தரக்கூடிய, சூரிய ஒளிமின் நிலைய திட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, அமெரிக்காவில் உள்ள இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க, அதானி குழுமம் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் முறைகேடாக பெறப்பட்ட இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம் அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எக்சேஞ்ச் கமிஷன், முதலீட்டாளர்களை ஏமாற்றுதல், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முன்வருதல் குற்றச்சாட்டை அதானி மீது வைத்துள்ளது. இதுதொடர்பாக கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, சௌரவ் அகர்வால் உள்பட 7 பேரின் மீதும் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து நியூயார்க் நீதிமன்றம் 7 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக அதானி குழுமம் தரப்பில் இருப்பில் எந்த ஒரு விளக்கமும் தரப்படவில்லை.

அதானி குழுமம் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு, தங்கள் நிறுவன பங்குகளை போலியாக அதிகரிக்கச் செய்வதாக அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...