வரலாற்றில் இன்று (21.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

நவம்பர் 21 (November 21) கிரிகோரியன் ஆண்டின் 325 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 326 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 40 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 164 – மக்கபேயர் மன்னர் யூதாசு மக்கபெயசு எருசலேம் கோவிலைப் புதுப்பித்துக் கட்டினார். இந்நிகழ்வு ஆண்டுதோறும் அனுக்கா திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

235 – போந்தியனுக்குப் பின் அந்தேருசு 19-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

1386 – சமர்கந்துவின் தைமூர் ஜார்ஜியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றி, ஜோர்ஜிய மன்னர் ஐந்தாம் பக்ராத்தைக் கைது செய்தான்.

1676 – தென்மார்க்கு வானியலாளர் ஓலி ரோமர் ஒளியின் வேகத்தின் முதலாவது அளவீட்டைக் கண்டுபிடித்தார்.

1789 – வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது.

1877 – ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தாமசு ஆல்வா எடிசன் அறிவித்தார்.

1894 – முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை சப்பான் கைப்பற்றியது.

1905 – ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.

1916 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியாவின் பிரித்தானிக் கப்பல் கிரேக்கத்தில் ஏஜியன் கடலில் வெடித்து மூழ்கியதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

1920 – டப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 அயர்லாந்துப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1918 – உக்ரைன், லுவோவ் நகரில் குறைந்தது 50 யூதர்கள், 270 உக்ரைனியக் கிறித்தவர்கள் போலந்துப் படைகளால் கொல்லப்பட்டனர்.

1942 – அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க நீர்மூழ்கி சீலயன் சப்பானியப் போர்க் கப்பல்கள் கொங்கோஉராக்கேசு மூழ்கடிக்கப்பட்டன.

1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. “ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.

1950 – வடகிழக்கு பிரிட்டிசு கொலம்பியாவில் இரண்டு கனடியத் தொடருந்துகள் மோதியதில் 21 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 17 பேர் கனடிய இராணுவத்தினர் ஆவார்.

1962 – சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் இந்தோ-சீனப் போரில் போர் நிறுத்தம் செய்வதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.

1963 – இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.

1969 – முதலாவது ஆர்ப்பநெட் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

1969 – ஓக்கினாவா தீவை 1972 இல் சப்பானியரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜப்பான் பிரதமர் ஐசாக்கு சாட்டோவுக்கும் இடையில் வாசிங்டனில் கையெழுத்திடப்பட்டது.

1971 – வங்காள தீவிரவாதக் குழுவான முக்தி வாகினியின் உதவியுடன் இந்தியப் படைகள் கரிப்பூர் என்ற இடத்தில் பாக்கித்தான் படைகளைத் தோற்கடித்தன.

1974 – பேர்மிங்காமில் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரின் குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

1980 – தமிழீழத் தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.

1980 – நெவாடாவில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 87 பேர் கொல்லப்பட்டு 650 பேர் காயமடைந்தனர்.

1990 – புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது.

1990 – மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.

1996 – புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.

2004 – டொமினிக்காத் தீவில் இடம்பெற்ற நிலநடுக்கம் போர்ட்ஸ்மவுத் நகரில் பலத்த சேதத்தை விளைவித்தது.

2009 – சீனாவில் சுரங்க வெடி விபத்தில் சிக்கி 108 பேர் உயிரிழந்தனர்.

2013 – லாத்வியா, ரீகா நகரில் வணிகத் தொகுதி ஒன்றின் கூரை இடிந்து விழ்ந்ததில் 54 பேர் உயிரிழந்தனர்.

2013 – உக்ரைனில் அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச் உக்ரைனிய-ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை இடைநிறுத்தியதை அடுத்து, அங்கு பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

2017 – 37 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் ராபர்ட் முகாபே சிம்பாப்வே அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

பிறப்புகள்

1694 – வோல்ட்டயர், பிரான்சிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1778)

1854 – பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை) (இ. 1922)

1902 – ஐசக் பாஷவிஸ் சிங்கர், நோபல் பரிசு பெற்ற போலந்து-அமெரிக்க எழுத்தாளர் (இ. 1991)

1933 – த. இராசலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

1938 – ஹெலன், ஆங்கிலோ-பர்மிய இந்தியத் திரைப்பட நடிகை

1941 – ஆனந்திபென் படேல், இந்தியாவின் குசராத் முதலமைச்சர்

1949 – கே. கோவிந்தராஜ், இலங்கையின் மலையக எழுத்தாளர் (இ. 2009)

1968 – ஆயு உத்தமி, இந்தோனேசிய எழுத்தாளர்

இறப்புகள்

1555 – அகிரிகோலா சார்சியஸ், செருமானிய கனிமவியலாளர், கல்வியாளர் (பி. 1490)

1912 – வலையட்டூர் வெங்கையா, இந்தியக் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாளர் (பி. 1864)

1970 – ச. வெ. இராமன், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் (பி. 1888)

1991 – தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1903)

1994 – மால்கம் ஆதிசேசையா, இந்தியக் கல்வியாளர், பொருளியலாளர் (பி. 1910)

1996 – அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாக்கித்தானிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1926)

2012 – அஜ்மல் கசாப், பாக்கித்தானிய தீவிரவாதி (பி. 1987)

2022 – ஔவை நடராசன், தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர் (பி. 1936)

சிறப்பு நாள்

மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் (கிறித்தவம்)

உலகத் தொலைக்காட்சி நாள்

தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம் (தமிழீழம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!