வரலாற்றில் இன்று ( 06.05.2024)

 வரலாற்றில் இன்று ( 06.05.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 6 கிரிகோரியன் ஆண்டின் 126 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 127 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 239 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1527 – எசுப்பானிய, செருமனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். சுவீடனின் 147 படையினர் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சிற்கு எதிராகப் போரிட்டு இறந்தனர். இது ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் கால முடிவு என சிலர் கருதுகின்றனர்.
1536 – இன்கா படைகள் குசுக்கோ நகரை எசுப்பானியரிடம் இருந்து கைப்பற்ற அதனை முற்றுகையிட்டனர்.
1536 – இங்கிலாந்தின் அனைத்துக் கிறித்தவ ஆலயங்களிலும் ஆங்கில மொழி திருவிவிலியம் கட்டாயமாக வைத்திருக்கப்பட வேண்டும் என எட்டாம் என்றி அரசர் கட்டளையிட்டார்.
1542 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துகேய இந்தியாவின் அக்காலத்தையத் தலைநகரான பழைய கோவாவை அடைந்தார்.
1659 – பிரித்தானிய இராணுவத்தின் ஒரு பகுதியினர் ரிச்சார்ட் குரொம்வெல்லை பொதுநலவாயத்தின் காப்பரசின் தலைவர் பதவியில் இருந்து அகற்றி ரம்ப் நாடாளுமன்ரத்தை மீண்டும் நிறுவினர்.
1682 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் தனது கோட்டையை வெர்சாய் அரண்மனைக்கு மாற்றினார்.
1757 – ஏழாண்டுப் போர்: பிரெடெரிக் தலைமையிலான புருசிய இராணுவம் பிராகா நகரில் ஆஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்தது.
1757 – பர்மிய உள்நாட்டுப் போர் (1740–1757) முடிவுக்கு வந்தது.
1782 – சியாம் மன்னர் முதலாம் இராமாவின் அறிவுறுத்தலின் பேரில் பெரிய அரண்மனையின் கட்டுமானப் பணிகள் பேங்காக் நகரில் ஆரம்பமாயின.
1840 – பென்னி பிளாக் அஞ்சல் தலை ஐக்கிய இராச்சியத்தில் (அயர்லாந்து உட்பட) பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
1853 – “த லிட்டரறி மிரர்” என்னும் ஆங்கில மாதிகையை யாழ்ப்பாணத்தில் வைமன் கதிரவேற்பிள்ளை ஆரம்பித்தார்.[1]
1854 – இந்தியாவில் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
1857 – பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8 இல் தூக்கிலிடப்பட்டார்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சா அமெரிக்கக் கூட்டணியில் இருந்து விலகியது.
1882 – சீனத் தொழிலாளர்கள் அமெரிக்காவுக்கு வரத் தடை விதிக்கும் சட்டம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேறியது.
1889 – ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.
1910 – ஐந்தாம் ஜோர்ஜ் அவரது தந்தை ஏழாம் எட்வேர்டின் இறப்பை அடுத்து ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினார்.
1916 – 21 லெபனான் தேசியவாதிகள் பெய்ரூட்டில் தூக்கிலிடப்பட்டனர்.
1916 – பிரெஞ்சு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வியட்நாம் பேரரசர் தூய் தான் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் ரீயூனியன் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
1937 – இன்டன்பர்க் பேரிடர்: செருமனியின் இன்டன்பேர்க் என்ற வான்கப்பல் லேக்கேர்சுடு, நியூ செர்சியில் தீப்பிடித்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் நிலை கொண்டிருந்த கடைசி அமெரிக்கப் படைகள் சப்பானிடம் சரணடைந்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: கிழக்கு ஐரோப்பாவின் கடைசிப் பெரும் சமர் பிராகா நகரில் ஆரம்பமானது.
1954 – ரோஜர் பேனிஸ்டர் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் கடந்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1960 – வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் இருந்து முதல் தடவையாக அரச திருமணம் ஒன்று தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இளவரசி மார்கரெட், அந்தனி ஆர்ம்ஸ்ட்ரோங்-யோன்சு ஆகியோரின் திருமணத்தை 20 மில்லியன் பேர் கண்டுகளித்தனர்.
1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முசுலிம் குடியரசுத் தலைவரானார்.
1975 – 100,000 ஆர்மீனியர் பெய்ரூட்டில் நடந்த ஆர்மீனிய இனப்படுகொலையின் 60-வது நினைவுநாள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
1976 – இத்தாலியில் இடம்பெற்ற 6.5 அளவு நிலநடுக்கத்தில் 900-978 பேர் உயிரிழந்தனர்.
1984 – சியோல் நகரில் 103 கொரிய மாவீரர்களை திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் புனிதர்களாக அறிவித்தார்.
1988 – நோர்வேயில் வானூர்தி ஒன்று டோர்காட்டன் மலையுடன் மோதியதி வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 36 பேரும் உயிரிழந்தனர்.
1994 – ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய் சுரங்கத்தை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத், பிரெஞ்சு தலைவர் பிரான்சுவா மித்தரான் ஆகியோர் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
2001 – சிரியாவுக்கான தனது பயணத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் பள்ளிவாசல் ஒன்றிற்கு சென்றார். பள்ளிவாசலுக்கு சென்ற முதலாவது திருத்தந்தை இவரேயாவார்.

பிறப்புகள்

1501 – இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) (இ. 1555)
1856 – சிக்மண்ட் பிராய்ட், ஆத்திரிய உளவியலாளர் (இ. 1939)
1861 – மோதிலால் நேரு, இந்திய தேசிய காங்கிரசு தலைவர் (இ. 1931)
1871 – விக்டர் கிரின்யார்டு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (இ. 1935)
1872 – வில்லெம் தெ சிட்டர், டச்சு கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1934)
1896 – ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட், சுவீடன் இயற்பியலாளர் (இ. 1966)
1904 – ஹரி மார்ட்டின்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (இ. 1978)
1918 – சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான், அபுதாபி நகர அமீர், அமீரகத்தின் முதலாவது அரசுத்தலைவர் (இ. 2004)
1942 – லால் தன்ஃகாவ்லா, இந்தியாவின் மிசோரம் மாநில முதலமைச்சர்
1953 – டோனி பிளேர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
1961 – ஜார்ஜ் குளூனி, அமெரிக்க நடிகர், இயக்குநர்
1963 – பொன்வண்ணன், தமிழகத் திரைப்பட நடிகர்

இறப்புகள்

1782 – கிறித்தைன் கிர்ச், செருமனிய வானியலாளர் (பி. 1696)
1859 – அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட், செருமானிய புவியியலாளர், நாடுகாண் பயணி (பி. 1769)
1862 – கென்றி டேவிட் தூரோ, அமெரிக்கக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1817)
1915 – வாசிலி பாவ்லோவிச் எங்கல்கார்த், உருசிய வானியலாளர் (பி. 1828)
1922 – சாகு மகாராசர், மகாராட்டிரா கோல்காப்பூர் சமத்தான மன்னர் (பி. 1874)
1952 – மரியா மாண்ட்டிசோரி, இத்தாலிய-டச்சு மருத்துவர், கல்வியாளர் (பி. 1870)
1959 – ராக்னர் நர்க்சு, எசுத்தோனிய-அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1907)
1963 – தியோடர் வான் கார்மன், அங்கேரிய-அமெரிக்கக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1881)
1979 – கார்ல் வில்லெம் ரெய்ன்முத், செருமானிய வானியலாளர் (பி. 1892)
1992 – மார்லீன் டீட்ரிக், செருமானிய-அமெரிக்க நடிகை, பாடகி (பி. 1901)
2008 – அல்லா கெனெரிகோவ்னா மாசேவிச், சோவியத் உருசிய வானியலாளர் (பி. 1918)
2016 – லட்சுமி ஹோம்ஸ்ட்ராம், பிரித்தானியத் தமிழ் எழுத்தாளர் (பி. 1935)

சிறப்பு நாள்

மாவீரர் நாள் (காபோன்)
மாவீரர் நாள் (லெபனான், சிரியா)
ஆசிரியர் நாள் (ஜமேக்கா)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...