Tags :பாலகணேஷ்

தொடர்

கேப்ஸ்யூல் நாவல் – சிவகாமியின் சபதம் 04 – பாலகணேஷ்

சிதைந்த கனவு ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட, மாமல்லருக்கு பாண்டிய குமாரியுடன் திருமணமாகி மகேந்திரன் என்ற மகனும், குந்தவி என்ற மகளும் பிறந்திருக்கிறார்கள். மாமல்லர், ஆயனரைச் சந்தித்து தாம் திரட்டியிருக்கும் பெரும் படையுடன் வாதாபி நோக்கிச் செல்வதைச் சொல்ல, தாமும் வருவதாகக் கூறுகிறார் ஆயனர். தன் அரசையிழந்து நரசிம்மரிடம் உதவிகோரி வந்திருக்கும் இளவரசன் மானவர்மன் தானும் மாமல்லருடன் யுத்தத்துக்கு வருவதாகச் சொல்கிறான். தன் ஒற்றர் படை மூலம் சில ஆண்டுகளாகவே பல்லவர் படையெடுத்து வருவதாக வதந்தியைக் கிளப்பி, படையெடுக்காமல் […]Read More

தொடர்

கேப்ஸ்யூல் நாவல் – சிவகாமியின் சபதம் 02 – பாலகணேஷ்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை எட்டு மாதங்கள் கழித்து போர்முனையில் வீர சாகசங்கள் செய்து அனுபவம் பெற்ற படைத் தளபதியாக காஞ்சிக்கு வரும் பரஞ்சோதியை மாமல்லர் வரவேற்று தன் உயிர்த் தோழனாக்கிக் கொள்கிறார். வாதாபிப் படைகள் முற்றுகையிட வருவதால் காஞ்சிக் கோட்டையை ஆயத்தப்படுத்தும் பணியை இருவரும் செய்கின்றனர். ஆயனச் சிற்பியையும், சிவகாமியையும் காஞ்சிக்குள் வரும்படியும் இல்லாவிட்டால் சோழநாடு செல்லும்படியும் பரஞ்சோதி தெரிவிக்கிறார். இதற்கிடையில் மாமல்லரும் சிவகாமியும் எழுதிக் கொண்ட காதல் ஓலைகளை ஒற்றர் தலைவன் சத்ருக்னன், போர்முனையிலிருக்கும் […]Read More

3D பயாஸ்கோப்

படப்பொட்டி – ரீல்: 14 – பாலகணேஷ்

அரசியலாகட்டும், சினிமாவாகட்டும்… இரண்டுமே மக்களின் மறதி அல்லது அலட்சியம் என்னும் அஸ்திவாரத்தின் மீதுதான் கட்டமைக்கப்படுகிறது. பரபரப்பான இயல்பு வாழ்க்கைக்கு இடையில் ஏற்கனவே பேசிய பேச்சுக்களை ஒப்பிட்டுப் பார்க்கவோ, பார்த்த கதையாக இருக்கிறதே என்று யோசிக்கவோ செய்வதில்லை, அல்லது செய்தாலும் சொல்வதில்லை. (இன்றைய மீடியா உலகிற்கு இது பொருந்தாது. நான் சொல்வது முந்தைய காலகட்டத்தை). ஒரே கதை பலமுறை படமாக்கப்பட்டது என்ற பெருமைக்குரியது ‘மாயா பஜார்’ திரைப்படம் என்று முன்பொரு அத்தியாயத்தில் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது மற்றொரு வினோதத்தைப் […]Read More

3D பயாஸ்கோப்

படப்பொட்டி – ரீல்: 13 – பாலகணேஷ்

மூன்று தீபாவளிகள் கண்ட ‘ஹரிதாஸ்’ 16.10.1944 தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்தது தியாகராஜ பாகவதரின் ‘ஹரிதாஸ்’. பாகவதர் நடிக்கும் படங்களின் கதைகள் பெரும்பாலும் புராண, இதிகாசக் கதைகளிலிருந்து எடுத்தாளப் பெற்றவையாகவே அமைந்திருக்கும். அந்த வகையில் இந்தப் படத்தின் கதை ‘ஸ்ரீ பக்த விஜயம்’ என்ற புராண நூலிலிருந்து எடுக்கப்பட்டது. (படத்தின் டைட்டிலிலேயே இது தெரிவிக்கப்பட்டிருக்கும். நேர்மை நிறையவே இருந்த காலம் அது.) 1944ல் தீபாவளிக்கு திரையைக் கண்ட ஹரிதாஸ் 1947 தீபாவளிக்குப் பின்னரே திரையை விட்டு அகன்றது. […]Read More

3D பயாஸ்கோப்

படப்பொட்டி – ரீல்: 12 – பாலகணேஷ்

புரட்சி + தேசபக்தி = ‘தியாகபூமி’ 1986ம் ஆண்டு சுஜாதா சினிமாவுக்காக எழுதிய ‘விக்ரம்’ கதையைக் குமுதத்தில் தொடராக வெளியிடச் செய்தார் கமல். படத்தின் ஸ்டில்களுடன் வரத் தொடங்கியது. கதை வந்த வேகத்திற்குப் படம் வளராததால் பல ஸ்டில்கள் ரிப்பீட் செய்யப்பட்டு கதை முடிந்ததும் படம் திரைக்கு வந்தது. அதற்கு முன்பாக 1981ல் தன் ‘மௌனகீதங்கள்’ படத்தின் கதையை படத்தின் ஸ்டில்களுடனேயே (க்ளைமாக்ஸ் தவிர்த்து) வெளியிட்டார் கே.பாக்யராஜ். சரியான விகிதத்தில் கதை வளர்ந்த வேகத்திற்கு படமும் வளர்ந்து […]Read More

3D பயாஸ்கோப்

படப்பொட்டி – ரீல்: 11 – பாலகணேஷ்

மறக்க முடியாத ‘அந்த நாள்’ 1954ல் ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘அந்த நாள்’ திரைப்படம் வெளியானது. அந்த நாள் மட்டுமில்லை, இந்த நாளும், எந்த நாளும் பார்த்தாலும் ப்ரெஷ்ஷாக இருக்கும் ஒரு ‘என்றும் பசுமை’ மர்மப் படம் இது. இதன் கதையை எழுதி இயக்கியவர் தமிழின் ஹிட்ச்காக் எஸ்.பாலசந்தர்.Read More

3D பயாஸ்கோப்

படப்பொட்டி – ரீல்: 10 – பாலகணேஷ்

முதல் மூன்றுவேடப் படம்! 1940ம் ஆண்டில் வெளிவந்த ‘உத்தமபுத்திரன்’ படத்தில் குடிகாரனும், ஸ்திரீலோலனுமாகிய அண்ணனாகவும், உத்தமனாக தம்பியாகவும் இரட்டை வேடங்களில் நடித்து, தமிழில் முதலில் இரட்டை வேடம் நடித்த நடிகர் என்ற பெருமையைப் பெற்றார் பி.யு.சின்னப்பா. அதே சின்னப்பா 1949ம் ஆண்டில் முதல்முறையாக மூன்று வித்தியாசமான குணச்சித்திரங்களைக் கொண்ட வேடங்களில் நடித்த நடிகர் என்ற மற்றொரு பெருமையையும் தன் கணக்கில் சேர்த்துக் கொண்டார். ‘மங்கையர்க்கரசி’ என்ற திரைப்படத்தில் அப்பா, மகன், பேரன் என்று மூன்று வேடங்களில் நடித்தார் […]Read More

3D பயாஸ்கோப்

படப்பொட்டி – ரீல்: 9 – பாலகணேஷ்

மாற்றப்பட்ட க்ளைமாக்ஸ்கள்! 1972ம் ஆண்டு சிவாஜிகணேசனின் வெற்றிப் படங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றான ‘வசந்த மாளிகை’ வெளியானது. குடிகாரனாக வாழும் நல்ல குணம் படைத்த ஜமீன்தாராக வரும் சிவாஜிகணேசன், காதல் தோல்வியால் விஷம் குடித்து இறந்து விடுவதாக படத்தின் க்ளைமாக்ஸ் அமைந்திருந்தது. சோகமான இந்த க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை என்று ரசிகர்களும் விநியோஸ்தர்களும் அதிருப்தி தெரிவிப்பதை உணர்ந்த இயக்குநர் பிரகாஷ்ராவ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிவாஜிகணேசன் உயிர் பிழைப்பதாக க்ளைமாக்ஸை சற்றே நீட்சி செய்து சுபமாக மாற்றிவிட, படம் பெரும்வெற்றியை அடைந்தது. […]Read More

3D பயாஸ்கோப்

படப்பொட்டி – ரீல்: 8 – பாலகணேஷ்

படப்பொட்டி – ரீல்: 8 – பாலகணேஷ் தமிழின் முதல் பிரம்மாண்டம்! 1948ம் ஆண்டின் துவக்கத்தில் சினிமாப் பத்திரிகைகளில் ‘ஏப்ரல் 9ம் தேதி வெளிவருகிறது சந்திரலேகா. ஜெமினியின் அபூர்வ சிருஷ்டி’ என்ற விளம்பரம் வெளியானது. தமிழ்சினிமாவின் முதல் பிரம்மாண்டத் திரைப்படம் என்று சொல்லக்கூடிய ‘சந்திரலேகா’ படத்திற்குப் பின் திரு.எஸ்.எஸ்.வாசனின் ஐந்து வருட உழைப்பும், பணமும் மறைந்து கிடந்ததை அவ்விளம்பரம் சொல்லவில்லை. Read More

3D பயாஸ்கோப்

படப்பொட்டி – 7வது ரீல் – பாலகணேஷ்

படப்பொட்டி – 7 வது ரீல் – பாலகணேஷ் அலெக்ஸாண்டர் டூமாஸ் என்கிற நாவலாசிரியர் எழுதிய கதையை அடிப்படையாக வைத்து 1939ம் ஆண்டில் ‘தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படக் கதையைத் தமிழுக்கேற்றவாறு மாற்றி, 1940ல் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கினார்.  பி.யு.சின்னப்பா இரட்டைச் சகோதரர்களாக நடித்தார். தமிழ் சினிமாவில் இரட்டை வேடம் ஏற்று நடித்த முதல் நடிகர் பி.யு.சின்னப்பாதான். அது மட்டுமில்லை, மூட்டை […]Read More