வரலாற்றில் இன்று (26.10.2024 )

 வரலாற்றில் இன்று (26.10.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

அக்டோபர் 26 (October 26) கிரிகோரியன் ஆண்டின் 299 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 300 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 66 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

740 – ரோமப் பேரரசின் கொன்ஸ்டண்டீனபோல் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பலத்த உயிர்ச் சேதத்தை உண்டுபண்ணியது.
1640 – ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1776 – அமெரிக்கப் புரட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் பெஞ்சமின் பிராங்கிளின் பிரான்ஸ் புறப்பட்டார்.
1859 – வடக்கு வேல்சில் றோயல் சார்ட்டர் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 459 பேர் இறந்தனர்.
1876 – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பிரித்தானிய அரசரால் எடுக்கப்பட்டது.
1905 – நோர்வே, சுவீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1917 – முதலாம் உலகப் போர்: இத்தாலி கபொரேட்டொ என்ற இடத்தில் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுடன் மோதி கடும் தோல்வியைச் சந்தித்தது.
1917 – முதலாம் உலகப் போர்: பிரேசில் போரில் குதித்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: சான்டா குரூஸ் தீவுகளில் இரண்டு அமெரிக்க வான்படைக் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
1947 – காஷ்மீர் மகாராஜா இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கச் சம்மதித்தார்.
1947 – ஈராக்கிலிருந்து பிரித்தானிய இராணுவம் வெளியேறியது.
1955 – ஆஸ்திரியாவில் கடைசி கூட்டுப்படைகள் வெளியேறின. ஆஸ்திரியா அணிசேரா நாடாக தன்னை அறிவித்தது.
1956 – ரஷ்ய இராணுவம் ஹங்கேரியை முற்றுகையிட்டது
1977 – பெரியம்மை நோய் தாக்கிய கடைசி நோயாளி சோமாலியாவில் அடையாளம் காணப்பட்டார். உலக சுகாதார அமைப்பு இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.
1979 – தென் கொரியா அதிபர் பார்க் சோங்-ஹீ இராணுவத் தளபதி கிம் ஜே-கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1984 – “பேபி ஃபே” (Baby Fae) பபூன் என்ற மனிதக் குரங்கிலிருந்து இருதய மாற்றைப் பெற்று 21 நாட்கள் உயிர் வாழ்ந்தது.
1994 – ஜோர்தான் மற்றும் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
1994 – பேர்மாவின் கடைசித் தேற்றம் அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
1995 – இஸ்லாமிய ஜிகாட் தலைவர் ஃபாதி ஷிக்காகி என்பவர் மோல்டாவில் உள்ள விடுதி ஒன்றில் மொசார்ட் அமைப்பினரால் கொல்லப்பட்டார்.
2000 – ஐவரி கோஸ்ட்டின் அதிபர் ரொபேர்ட் கூயெய் பதவியிறக்கப்பட்டு லோரெண்ட் குபாக்போ என்பவர் அதிபரானார்.
2001 – ஐக்கிய அமெரிக்கா “அமெரிக்க தேசப் பற்று சட்டத்தை” நிறைவேற்றியது.
2002 – மொஸ்கோவில் நாடக மாளிகை ஒன்றில் செச்னியா தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
2003 – கலிபோர்னியாவில் இடம்பெற்ற தீயில் 15 பேர் கொல்லப்பட்டு 250,000 ஏக்கர், மற்றும் 2,200 வீடுகள் சான் டியேகோ நகரில் அழிந்தன.

பிறப்புகள்

1947 – இலரி கிளின்டன், ஐக்கிய அமெரிக்காவின் செனட் அவை உறுப்பினர்
1959 – எவோ மொரல்ஸ், பொலிவியாவின் சனாதிபதி
1965 – மனோ தென்னிந்தியத் திரைப்பட பாடகர்
1985 – அசின், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1985 – மான்ட்டே எலிஸ், அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்

இறப்புகள்

2001 – மரகதம் சந்திரசேகர், இந்தியக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர், முன்னாள் மத்திய அமைச்சர்

சிறப்பு நாள்

ஆஸ்திரியா – தேசிய நாள் (1955)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...