லாரஸ் விருதுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பரிந்துரை

மாட்ரிட்: விளையாட்டு உலகின் மிக உயர்ந்த விரு​தான லாரஸ் விருதுக்கு இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி​யின் பெயர் பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது. கடந்த ஆண்டு நடை​பெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி முதன் முறை​யாக சாம்​பியன் பட்​டம் சாதனை படைத்​திருந்​தது.

இதைத் தொடர்ந்து 2026-ம் ஆண்​டுக்​கான லாரஸ் விருதுக்கு ஆண்​டின் சிறந்த அணி​கள் பிரிவுக்கு இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி​யின் பெயர் பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்​கான அதி​காரப்​பூர்வ அறி​விப்பு ஸ்பெ​யினின் மாட்​ரிட் நகரில் நேற்று நடை​பெற்​றது.

இதன் மூலம் சிறந்த அணிக்​கான பிரிவுக்கு பரிந்​துரை செய்​யப்​பட்ட முதல் மகளிர் கிரிக்​கெட் அணி என்ற பெரு​மையை இந்​திய அணி பெற்​றுள்​ளது. இது இந்​திய மகளிர் அணி​யின் செயல் திறனுக்கு கிடைத்த அங்​கீ​கார​மாக பார்க்​கப்​படு​கிறது.

சிறந்த அணிக்​கான விருதுக்கு இந்​திய மகளிர் அணி​யுடன் இங்​கிலாந்து மகளிர் கால்​பந்து அணி, ஐரோப்​பிய ரைடர் கோப்பை அணி, பாரிஸ் செயின்ட் ஜெர்​மைன் கிளப் கால்​பந்து அணி, மெக்​லாரன் பார்​முலா 1 அணி ஆகிய​வற்​றின் பெயர்​களும் பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளன. இந்த விரு​தின் வெற்​றி​யாளர் வரும் ஏப்​ரல் 20-ம் தேதி மாட்​ரிட்​டில் நடை​பெறும் விழா​வில் அறிவிக்​கப்​ படு​வார்​கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!