படப்பொட்டி – ரீல்: 10 – பாலகணேஷ்
முதல் மூன்றுவேடப் படம்!
1940ம் ஆண்டில் வெளிவந்த ‘உத்தமபுத்திரன்’ படத்தில் குடிகாரனும், ஸ்திரீலோலனுமாகிய அண்ணனாகவும், உத்தமனாக தம்பியாகவும் இரட்டை வேடங்களில் நடித்து, தமிழில் முதலில் இரட்டை வேடம் நடித்த நடிகர் என்ற பெருமையைப் பெற்றார் பி.யு.சின்னப்பா. அதே சின்னப்பா 1949ம் ஆண்டில் முதல்முறையாக மூன்று வித்தியாசமான குணச்சித்திரங்களைக் கொண்ட வேடங்களில் நடித்த நடிகர் என்ற மற்றொரு பெருமையையும் தன் கணக்கில் சேர்த்துக் கொண்டார். ‘மங்கையர்க்கரசி’ என்ற திரைப்படத்தில் அப்பா, மகன், பேரன் என்று மூன்று வேடங்களில் நடித்தார் அவர். எஃப் நாகூர் என்பவர் பாக்யா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்த ‘மங்கையர்க்கரசி’ 1949ல் வெளியானது.