இஸ்ரோ தலைவர் சிவன்
நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரீசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1வது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.
இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 130 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாயும் 75வது ராக்கெட் ஆகும். பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.
வெளிநாடுகளை சேர்ந்த மற்ற 9 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக வின்னிள் நிலைநிறுத்தப்பட்டன. பிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி – இஸ்ரோ தலைவர் சிவன்.
குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பெயரை கூறியும் இஸ்ரோ தலைவர் சிவன் வாழ்த்து தெரிவித்தார். பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி. இஸ்ரோவின் கடந்த கால மற்றும் நிகழ்கால முன்னோடிகளால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது – சிவன்.