Tags :பாலகணேஷ்

தொடர்

பயராமனும் பாட்டில் பூதமும் | 10 | பாலகணேஷ்

ஜீனி திகைத்தது. ‘ழே’யென்று விழித்தது. அதற்குள் இங்கே விபரீதம் அரங்கேறத் தொடங்கியிருந்தது. “அப்பா… எனக்கு என்னாச்சு..? இந்தத் தடியன் உடம்புக்குள்ள நான் எப்டி வந்தேன்..?” என்று அலறியபடி சங்கரனிடம் ஓடினாள் குமார். “ராஸ்கல், தடியன் கிடியன்னு சொன்னே பிச்சுப்புடுவேன். மரியாதை கெட்டவளே..” என்றபடி அவனைத் துரத்தினான் நிஷா. “சரி, மரியாதையாவே சொல்றேன். அப்பா, இந்தத் தடியர்ர்ர் உடம்புக்குள்ள நான் எப்டி வந்தேன்னு சுத்தமாப் புரியல. காப்பாத்துங்க..” என்றபடி சங்கரனிடம் அண்டினாள் குமார். “யோவ் மாப்ள… என்ன வேலையய்யா […]Read More

தொடர்

பயராமனும் பாட்டில் பூதமும் | 9 | பாலகணேஷ்

‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம், ஜய்யடா ஜ்ய்யடா ஜய்யடா’ என்று பாடியபடியே மிதந்து கொண்டிருந்த ஜீனி, சட்டென்று நின்றது. ‘யாரோ பார்க்கிறார்கள்’ -அதன் உணர்வு உறுத்தியது. சட்டென்று மனதைக் குவித்து யார் என்று அறிய முயன்றது. மனத்திரையில் கோரைத் தலையுடன், சிவப்பு எல்ஈடி லைட் போன்ற கண்களுடன், தெற்றாக நீண்ட கிழிப்பற்களுடன் ஒரு சூனியக்காரி முகம் தெரிந்தது. “ஐயையோ…” என்று துள்ளிக் குதித்தது ஜீனி. புயல்வேகத்தில் அவ்விடத்தை விட்டுப் பறக்க ஆரம்பித்தது. அரை நாழிகை நேரம் பறந்து […]Read More

தொடர்

பயராமனும் பாட்டில் பூதமும் | 8 | பாலகணேஷ்

ஓடியோடியோடி வந்த ஜெயராமனின் ஓட்டம் நின்ற இடம் நேரு பார்க். மூச்சுவாங்க அங்கிருந்த ஒரு பென்ச்சில் அமர்ந்தான். பக்கத்திலேயே மற்றொரு ‘புஸ்.. புஸ்..’ கேட்க, திரும்பிப் பார்த்தான். ஜீனி! “எஜமானே… உன்னால இம்பூட்டு வேகமா ஓட முடியும்னு நான் நெனச்சே பாக்கல. மிதந்து வர்ற எனக்கே மூச்சு வாங்க வெச்சுட்டியே…” “எனக்கு அமைஞ்ச மாதிரி உனக்கும் ஒரு பொண்டாட்டி அமைஞ்சிருந்தா, நீயும் இதைவிட நாலுமடங்கு வேகத்துல பறப்பேடா.” என்று ஜெயராமன் சொன்ன நேரத்தில் வானில் போன தேவதைகள் […]Read More

தொடர்

பயராமனும் பாட்டில் பூதமும் | 7 | பாலகணேஷ்

ஹரிபட்டர் ஆறடி உயரத்தில், கேட்டை இடித்துப் பெரிசாக்கினால்தான் வீட்டுக்கு உள்ளே வரமுடியுமோ என்று ஐயப்படும்படி இரண்டாள் அகலத்தில் இருந்தார். அடர்த்தியான சிகையை மேல்நோக்கித் தூக்கிச் சீவி குடுமி போட்டிருந்தார். “அடேங்கப்பா… ஏதோ ஒரு படத்துல வடிவேலு தலைமுடியை கோபுரம் மாதிரி வெச்சுக்கிட்டு வருவாரே… அந்த சைஸுலல்ல இருக்குது இவர் குடுமி..?” நிஷாவின் காதில் குமார் கிசுகிசுக்க, கிக்கிக்கியென்று வாய் பொத்திச் சிரித்தாள் அவள். இப்போது ஹரிபட்டரின் முதுகுக்குப் பின்னாலிருந்து உற்பத்தியானாள் அவள். இளைஞி. கேரள பாணியில் பார்டர் […]Read More

தொடர்

பயராமனும் பாட்டில் பூதமும் | 6 | பாலகணேஷ்

ஓபனிங் சீனில் ‘அம்மா’ என்றழைத்தபடி உற்சாகமாக ஓடிவரும் எம்ஜியார்போல ‘அம்மா’ என்று துள்ளிக் குதித்து வீட்டினுள் நுழைந்த குமார் சற்று திகைத்துப் போனான். இதென்ன… வீடு இத்தனை அமைதியாக இருக்கிறது..? மெல்ல அடியெடுத்து வைத்து சமையலறையினுள் நுழைந்தான். தனலட்சுமி அங்கே இல்லை. குழம்பியபடியே வெளியே வந்து தன்னறையினுள் நுழைந்து லைட்டைப் போட்டவன், கண்கள் விரிய அப்படியே ஆணியடித்தாற் போன்று நின்று விட்டான். எதிரே நின்றிருந்தது… அது! வெள்ளை நிற அங்கியில், கண்கள் மட்டுமே சிவப்பாய்த் தெரிய, ஈயென்று […]Read More

தொடர்

பயராமனும் பாட்டில் பூதமும் | 5 | பாலகணேஷ்

“அத்தான், இன்று என்ன சமைக்கட்டும்..?” தனம் அமைதியாகக் கைகட்டி நின்று கேட்க, அதை ரசித்தபடி, “ரசம் வெச்சுடு, வெங்காய சாம்பார் செஞ்சிடு, உருளைக்கிழங்கு பொரியல் செஞ்சுடு. போதும்..” அத்தனையும் அவளுக்குப் பிடிக்காத, தனக்குப் பிடித்த ஐட்டமாகவே சொல்லிவிட்டு அவள் முகபாவத்தை ஆராய்ந்தான். சலனமே இல்லாமல், “அப்படியே செய்கிறேன் அத்தான்..” என்றபடி உள்ளே சென்றாள். அவள் போனதும் சத்தமாக டிவியை வைத்து ரசிக்க ஆரம்பித்தான். சூரியகுமார யாதவன் பாகிஸ்தானைப் பிளந்து கொண்டிருந்தான் டிவியில். தமிழ் ரன்னிங் கமெண்ட்ரி சகிக்க […]Read More

தொடர்

பயராமனும் பாட்டில் பூதமும் | 4 | பாலகணேஷ்

வீட்டினுள் நுழைந்த தனலட்சுமியின் முகமானது அவளே போன வாரம் செய்த பாதுஷா போல இறுகிப் போயிருந்தது. அவள் பின்னாலேயே வந்த கடைப்பையன் மளிகைப் பைகளை வைத்துவிட்டு அவசரமாக வெளியேறினான். “எங்க போயிட்ட தனம் இவ்ளவு நேரம்..?” என்று குக்கரில் பதினைந்து விசில் வைத்து எடுத்த குருணையரிசி போலக் குழைந்தான் ஜெயராமன். “உங்கள மாதிரி ஒரு… ஒரு… இதை… கல்யாணம் பண்ணிக்கிட்டது என் தலையெழுத்து… மளிகை சாமான் வாங்கிட்டு வாய்யான்னா ஆளு போயே போயாச்சு. டிவி ரிமோட்டை வேற […]Read More

தொடர்

பயராமனும் பாட்டில் பூதமும் | 3 | பாலகணேஷ்

“ஒரு நிமிஷம் சார்…” வாசலை நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஜெயராமன் நின்றான். திரும்பினான். “என்னம்மா..?” “ஐம் ஸாரி, இதைப்பத்தி உங்ககிட்ட ரெண்டு விஷயம் சொல்ல மறந்துட்டேன்…” “என்னை மறதிக்காரன்னு கொஞ்சம் முன்னதான் காலை வாரின நீயி…” “ஹி… ஹி.. அதுவந்து சார்… இதைத் திறக்கறதுக்கு ரெண்டு கண்டிஷன் இருக்கு. ஒண்ணு பவுர்ணமிக்குள்ள இது வெளிய வந்தாகணும். நாளைக்கு நைட் பவுர்ணமி. அதுக்குள்ள நீங்க இதுக்கு விடுதலை குடுத்துடணும்…” “இல்லன்னா..?” “இன்னும் முன்னூறு வருஷம் அந்த ஜீனி உள்ளயே […]Read More

தொடர்

பயராமனும் பாட்டில் பூதமும் | 2 | பாலகணேஷ்

ஜெயராமன் குழம்பினான். ‘தன்னைப் பார்த்து இப்படியோர் அழகி சிரிக்கக் காரணமேயிராதே.. ஒருவேளை…’ வலப்புறம் திரும்பி பார்த்தான். அங்கே யாரும் இல்லை. திடீரென ஒரு பெரும் சந்தேகம் அவனை ஆட்கொண்டது. தன்னைக் குனிந்து பார்த்துக் கொண்டான். இல்லை… எல்லாம் சரியாகத்தான் போட்டிருக்கிறோம். சிந்தனையிலிருந்தவனை இழுத்துப் பிடித்தது, “சார், ஜெயராமன் சார்…” என்ற அவளது இனிய குரல். அட..! என் பெயர் இவளுக்கெப்படித் தெரியும்..? ‘ழே’யென்று விழித்தான். “இன்னிக்காவது வந்தீங்களே இங்க. உங்களுக்காக ஒரு மாசமாக் காத்திருக்கேன் ஜெயராமன் சார்…” […]Read More

தொடர்

பயராமனும் பாட்டில் பூதமும் | 1 | பாலகணேஷ்

அன்றைய தினம் தன் வாழ்க்கையில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைப்பதற்கான ஆரம்ப தினம் என்பதை அறியாதவனாக, முகத்தை அஷ்டகோணலாகச் சுளித்தபடி (சுளிக்காமலேயே அப்படித்தான் இருக்கும் என்பது வேறு விஷயம்) மனைவி தந்த காப்பியை விழுங்கிக் கொண்டிருந்தான் ஜெயராமன். திடீரென்று வீட்டினுள் மர்ம உருவம் ஒன்று தடதடவென உள்நுழைய, எழுந்து நின்று கத்தினான் ஜெயராமன். “டேய்… டேய்.. நில்றா, கதவு தொறந்திருந்தா வீட்ல நொழைஞ்சிடுவியா..? பட்டப்பகல்ல திறந்த வீட்ல எதுவோ நொழைஞ்சா மாதிரி விறுவிறுன்னு வர்றியே… யார்றா நீ..?” “அப்பா…” […]Read More