படப்பொட்டி – ரீல்: 13 – பாலகணேஷ்
மூன்று தீபாவளிகள் கண்ட ‘ஹரிதாஸ்’
16.10.1944 தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்தது தியாகராஜ பாகவதரின் ‘ஹரிதாஸ்’. பாகவதர் நடிக்கும் படங்களின் கதைகள் பெரும்பாலும் புராண, இதிகாசக் கதைகளிலிருந்து எடுத்தாளப் பெற்றவையாகவே அமைந்திருக்கும். அந்த வகையில் இந்தப் படத்தின் கதை ‘ஸ்ரீ பக்த விஜயம்’ என்ற புராண நூலிலிருந்து எடுக்கப்பட்டது. (படத்தின் டைட்டிலிலேயே இது தெரிவிக்கப்பட்டிருக்கும். நேர்மை நிறையவே இருந்த காலம் அது.)
1944ல் தீபாவளிக்கு திரையைக் கண்ட ஹரிதாஸ் 1947 தீபாவளிக்குப் பின்னரே திரையை விட்டு அகன்றது. இப்படி மூன்றாண்டுகள் அது பிய்த்துக் கொண்டு ஓடியதற்குக் காரணம் என்ன..? இதைப் பற்றி ஆராய்வதற்கு முன் சுருக்கமாக ‘ஹரிதாஸ்’ சொன்ன கதை என்ன என்பதைப் பார்த்து விடலாம்.