படப்பொட்டி – 7வது ரீல் – பாலகணேஷ்
படப்பொட்டி – 7 வது ரீல் – பாலகணேஷ்
அலெக்ஸாண்டர் டூமாஸ் என்கிற நாவலாசிரியர் எழுதிய கதையை அடிப்படையாக வைத்து 1939ம் ஆண்டில் ‘தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படக் கதையைத் தமிழுக்கேற்றவாறு மாற்றி, 1940ல் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கினார்.
பி.யு.சின்னப்பா இரட்டைச் சகோதரர்களாக நடித்தார். தமிழ் சினிமாவில் இரட்டை வேடம் ஏற்று நடித்த முதல் நடிகர் பி.யு.சின்னப்பாதான். அது மட்டுமில்லை, மூட்டை வேடம், ஸாரி, மூன்று வேடம் ஏற்று நடித்த முதல் நடிகரும் அவரே. (அந்தப் படம் பற்றி பிறகு தனி அத்தியாயம் வரும்). சின்னப்பாவுடன் எம்.வி.ராஜம்மா நடிக்க, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், காளி என்.ரத்னம் ஆகியோர் உடன் நடித்திருந்தனர். சங்கீதத்தை ஜி.ராமநாதன் செய்திருந்தார். படம் பெரு வெற்றி பெற்றது.