படப்பொட்டி – ரீல்: 9 – பாலகணேஷ்
மாற்றப்பட்ட க்ளைமாக்ஸ்கள்!
1972ம் ஆண்டு சிவாஜிகணேசனின் வெற்றிப் படங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றான ‘வசந்த மாளிகை’ வெளியானது. குடிகாரனாக வாழும் நல்ல குணம் படைத்த ஜமீன்தாராக வரும் சிவாஜிகணேசன், காதல் தோல்வியால் விஷம் குடித்து இறந்து விடுவதாக படத்தின் க்ளைமாக்ஸ் அமைந்திருந்தது. சோகமான இந்த க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை என்று ரசிகர்களும் விநியோஸ்தர்களும் அதிருப்தி தெரிவிப்பதை உணர்ந்த இயக்குநர் பிரகாஷ்ராவ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிவாஜிகணேசன் உயிர் பிழைப்பதாக க்ளைமாக்ஸை சற்றே நீட்சி செய்து சுபமாக மாற்றிவிட, படம் பெரும்வெற்றியை அடைந்தது.
இந்த விஷயம் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். தமிழில் இதுபோல் க்ளைமாக்ஸ் மாற்றப்பட்ட முதல் திரைப்படம் எது என்று தெரியுமா..? அந்தப் படத்தின் பெயர் ‘நவீன சாரங்கதரா’. 1937ல் வெளியான இந்தப் படத்தின் இயக்குனர் கே.சுப்ரமணியம்.