Tags :சிறுவர் தொடர்கதை

தொடர்

கோமேதகக் கோட்டை | 21 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

இளவரசியுடன் வித்யாதரன் கிளி வடிவில் பேசிக்கொண்டிருந்தபோது ராட்சதன் உள்ளே நுழைவதைக் கவனித்து விட்டான். நாவாயில் இருந்து கிளம்பும்போதே சித்திரக் குள்ளனையும் அழைத்துவந்திருந்தான் வித்யாதரன். ஒருவேளை கோட்டைக்குள் தான் நுழைய முடியாவிட்டால் சித்திரக் குள்ளனை உள்ளே அனுப்பி வேவு பார்த்துவர எண்ணியிருந்தான். ராட்சதன் கண்ணில் இப்போது தென்பட வேண்டாம் என்று குள்ளனை மட்டும் இளவரசியிடம் விட்டு விட்டு சிட்டெனப் பறந்துவிட்டான் வித்யாதரன். அப்படிக் கிளம்பும் சமயம் குள்ளனிடம், ராட்சதனை எவ்வளவு தூரம் கோபப்பட வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் […]Read More

தொடர்

கோமேதகக் கோட்டை | 20 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

”ஆ! என்னை வெல்பவன்! யார் அவன்? அவனை மிதித்தே கொன்று விடுகிறேன்!” கத்தினான் ராட்சதன். ”போ! போய் முடிந்தால் மிதித்து கொன்றுவிடு! அவன் இந்நேரம் உன் கோட்டைக்குள் இருப்பான்!” என்றார் மன்னர், போய் அவனை அழித்துவிட்டு வந்து உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்! எவனோ ஒரு பொடியனை அனுப்பி என்னைக் கொன்றுவிடுவீர்களா? அதையும் பார்த்துவிடுகின்றேன்! என்று ஆவேசத்துடன் உணவுப் பொருட்களைக் கூட எடுக்காமல் திரும்பிச்சென்றான் ராட்சதன். அந்த விடிந்தும் விடியாத பொழுதில் கோமேதக கோட்டையை நெருங்கிக் கொண்டிருந்தது ரணதீரனின் […]Read More

தொடர்

கோமேதகக் கோட்டை | 19 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

மந்திரப்பாய் பூதக்காட்டைக் கடந்து வேகமாக முன்னேறிக் கொண்டு இருந்தது. ”சூர்ப்பனகா..! நாம் இவ்வளவு வேகமாக வந்து விட்டோம்..! குதிரையில் வந்து கொண்டிருந்த நம் வீரர்களின் நிலை என்னவென்று உன் மந்திரசக்தியால் உணர்ந்து சொல்..!” என்று வித்யாதரன் கேட்டான். மந்திரக் கோலை புருவ மத்தியில் நிறுத்தி கண்களை மூடி மந்திரங்களை உச்சாடனம் செய்து தியானித்த சூர்ப்பனகா மெல்ல கண் திறந்தாள். ”வித்யாதரா..! நம் வீரர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். காட்டுக்குள்ளே ஓர் அரக்கனால் நாகபாசத்தால் கட்டுண்டு இருக்கிறார்கள்..!” என்றாள். ”அவர்களை […]Read More

தொடர்

கோமேதகக் கோட்டை | 18 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

‘உன் உடல் வேண்டுமானால் என் காதில் இருந்து வெளியே வா..! என்ற பூதகியின் அச்சுறுத்தலுக்கு என்ன பதில் சொல்வது? அப்படி வெளியே வந்தால் மட்டும் அவள் உடலை நசுக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?’ என்னசெய்வது என்று ஒரு நிமிடம் சிந்தித்தான் வித்யாதரன். ”என்ன வித்யாதரா? என்ன யோசிக்கிறாய்..? நீ என் காதை விட்டு வெளியே வருவதொன்றுதான் உனக்கான ஒரே வழி..! சீக்கிரம் வெளியே வா..!” வித்யாதரன் இப்போது மவுனித்து, ஏதோ தியானித்தான். உடனே சூர்ப்பனகா, “வித்யாதரா, […]Read More

தொடர்

கோமேதகக் கோட்டை | 17 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

கோமேதகக் கோட்டையினுள் சிறை வைக்கப்பட்டிருந்த இளவரசி சுமார் நான்கு நாழிகை காலம் செலவழித்து வித்யாதரனின் உருவத்தை வரைந்து முடித்தாள். “ ஆஹா! என்ன கம்பீரம்! என்ன அழகு! இவன் முகத்தில் இருக்கும் தேஜஸிற்கு இவன் அரச குமாரனாகப் பிறந்து இருக்க வேண்டியவன்! என்று அவள் மனது சொன்னது. வரைந்து முடித்த படத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் இளவரசியை நோக்கி வேகமாக வந்த ராட்சதன் அவள் கையிலிருந்த அந்த திரைச்சீலையை வாங்கிப் பார்த்தான். அவன் முகத்தில் ஓர் ஏளனம் தோன்றியது. […]Read More

தொடர்

கோமேதகக் கோட்டை | 16 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

“வித்யாதரன் எப்படி இருப்பான் என்று எனக்குத் தெரியும்” என்று வில்லவபுர இளவரசி சொன்னதும் அந்த ராட்சதன் ‘இடி இடி’ எனச் சிரித்தான். “இதோ இங்கேயே இருக்கிறது நமது துருப்புச் சீட்டு! இவளுக்கு வித்யாதரன் எப்படி இருப்பான் என்று தெரியுமாம்! இனி நமக்கு என்ன கவலை? இவளிடம் வித்யாதரனின் உருவத்தை வரைந்து கொடுக்கச் சொல்வோம்! அதை எடுத்துக் கொண்டு வில்லவபுரம் செல்வோம்! அங்கே வித்யாதரனைப் பிடிப்போம்! எப்படி என் யோசனை?” என்று கேட்டான். “பிரபோ! வித்யாதரன் வில்லவபுரத்தில்தான் இருப்பான் […]Read More

தொடர்

கோமேதகக் கோட்டை | 15 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

தன்னிடமிருந்து மந்திரப்பாயையும் மந்திரக் கோலையும் எடுத்துக்கொண்டு சூர்ப்பனாக பறப்பதை பார்த்த வித்யாதரனால் சில நிமிடங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை..! சிறிய கவனக்குறைவு இத்தனை பெரிய விபரீதம் ஆகிவிட்டதே..! மன்னருக்கு என்ன பதில் சொல்வது என்று அவன் மனம் கலங்கி நின்றான். அவனது மனம் “கணேசா காப்பாற்று!” என்று காரியசித்தி கணபதியை நினைத்துப் பிரார்த்தித்தது. அப்போது ஆகாய வீதியில் பறந்து கொண்டிருந்த சூர்ப்பனகாவின் எதிரே ஓர் உருவம் பறந்து வந்து நின்றது. அதன் வயிறு பெருத்திருந்தது. காதுகள் நீன்றிருந்தது. […]Read More

தொடர்

கோமேதகக் கோட்டை | 14 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

”நீர் வந்த காரியம் என்ன தூதுவரே?” என்று மன்னர் கேட்டதும் ரணதீரன் சொல்ல ஆரம்பித்தார். “மன்னர் மன்னா! எங்கள் நாட்டின் கீழ் எல்லை கடல்பரப்பாகும். கடல் வழி வாணிபத்தில்தான் எங்கள் பொருளாதாரமே அடங்கி இருக்கிறது. எங்கள் வணிகர்கள் கடல் வழியே அண்டை நாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டி வருகின்றனர். அப்படி பொருள் ஈட்டி வரும் நாடுகளில் ஒன்று ஸ்வேதபுரி. ஸ்வேதபுரியில் விளையும் முத்துகள் அற்புதமானவை. அங்கு சென்று முத்துகளை வாங்கி பிற நாடுகளுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்து […]Read More

தொடர்

கோமேதகக் கோட்டை | 13 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

‘மந்திரப் பாயைக் குருதட்சணையாகத் தரச் சம்மதமா..?’ என்று சூர்ப்பனகா கேட்டதும் வித்யாதரன் “ஹாஹா’ வென பெரிதாய் சிரித்தான். “கொக்கிற்கு மீனொன்றே மதி என்றொரு பழமொழி ஒன்று உண்டு..! ஆற்றில் ஒற்றைக் காலில் தவமிருந்து மீன் வருகிறதா என்று வேறு எதையும் சிந்திக்காமல் மீன் மீதே கவனம் வைத்திருக்குமாம் கொக்கு..! அதே போல் நீயும் விடாமல் மந்திரப் பாயின் மீதே கவனம் செலுத்திவருகிறாய்..! அதை நினைத்து சிரித்தேன்.” ”நீ மட்டும் என்னவாம்..? ராட்சதனைக் கொன்று இளவரசியை மீட்பது என்ற […]Read More

தொடர்

கோமேதகக் கோட்டை | 11 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

வித்யாதரன் விடைபெற்றுச் சென்ற சில நாழிகைகளில் வில்லவபுரம் மலைக் குன்றின் மீது ராட்சதன் தோன்றினான். அவன் கண்கள் கோபத்தால் சிவந்து இருந்தன. அவன் அங்கிருந்த சில மரங்களை பிடுங்கி அங்கே குழுமியிருந்த வீரர்கள் மீது எறிந்தான். ”அடேய்! முட்டாள் வீரர்களே! உணவில் எதைக் கலந்து கொடுத்தீர்கள்? உண்மையைச் சொல்லுங்கள்! ஒரு முழுநாள் நானும் என் கூட்ட்த்தினரும் உறங்கி இருக்கிறோம்! இது சாதாரணமாக நடக்காது! இப்போது அப்படி நடந்திருக்கிறது என்றால் ஏதோ காரணம் இருக்கிறது உண்மையைச் சொல்லுங்கள்!” என்று […]Read More