‘கோட்’ பட கிளிம்ஸ் வீடியோ வெளியீடு..!

 ‘கோட்’ பட கிளிம்ஸ் வீடியோ வெளியீடு..!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தி கோட் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் The G.O.A.T படத்தின் கிளிம்ப்ஸ் வீடீயோவை நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய் தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிளான விசில் போடு பாடல் வெளியாகி ரசிககர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, தற்போது 2வது சிங்கிளான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே நடிகர் விஜய்-ன் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தி கோட் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் இரண்டு விஜய் பைக்கில் அதிரடியாக எதிரிகளை தாக்கும் விதமாக காட்சியுள்ளது. இதன் மூலம் நடிகர் விஜய் தந்தை மகன் என இருவேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் படம் இறுதிகட்டப் படப்பிடிப்பில் உள்ளது. பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மோகன், லைலா, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...