“பார்த்த ஞாபகம்” குவிகம் வெளியீட்டு விழா நிகழ்வு..!
எனது 15 வது நூலாக “பார்த்த ஞாபகம்” – குவிகம் வெளியீடு – சிறுகதைகளும் சிறு சிறு கதைகளும் நூல் நேற்று சென்னை ராயப்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
எழுத்தாளர் மருத்துவர் டாக்டர் பாஸ்கரன் – எனது வழிகாட்டிகளில் ஒருவர், நலம் விரும்பி – நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நூலை வெளியிட்டு மிகச் சிறந்த மதிப்புரை மற்றும் நூல் அறிமுகவுரை ஆற்றி இலக்கிய சுவைஞர்களை தமது பேச்சுத் திறத்தால் கட்டிப் போட்டார்.
பிரதி பெற்ற எனது நீண்ட கால நண்பர் டெவலப்மெண்ட் செக்டர் நிபுணர் டாக்டர் ஆறுமுகம் சிறப்பான முறையில் வாழ்த்துரை வழங்கினார்.
கவிஞர் நடிகர் திரு பத்ராம் ரமேஷ் பளிச் மகிழ்வுரை வழங்கினார்.
மூத்த எழுத்தாளர் காந்தலட்சுமி சந்திரமௌலி நூலில் அணிந்துரை வழங்கியவர் சிறந்த முறையில் ஒரு ஆசியுரை வழங்கி நூலின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் வீரர் அசகாய சூரர், இந்த நூலின் பதிப்பாளர் குவிகம் கிருபானந்தன் வெகு விமரிசையாக செய்து இருந்தார்.
நிகழ்ச்சி நேரடியாக கலந்து கொண்டவர்கள் தவிர நிகர்நிலையாக ஜும் மூலம் பல்வேறு இலக்கிய ஆர்வலர்களைச் சென்றடைந்தது சிறப்பு.
நிகழ்ச்சியில் திரு ராய செல்லப்பா மற்றும் அவரது குடும்பத்தினர், புலவர் திவே விஜயலட்சுமி மற்றும் அவரது சகோதரி, காந்தலட்சுமி அவர்களின் மகள், உரத்த சிந்தனை அமைப்பின் தலைவர் பத்மினி பட்டாபிராமன், சரோஜா சகாதேவன், மடிப்பாக்கம் வெங்கட், ஏ எச் கோரி, எழுத்தாளர் என்சி மோகன்தாஸ், மலர்வனம் ராம்கி, எழுத்தாளர் கேஜி ஜவஹர், நாடக நிபுணர் கே எல் நாணு, பூபாளம் ஆர்கே, திரு சம்பத், பேராசிரியர் டாக்டர் ராஜ்குமார், பயிற்சியாளர் உதயசான்றோன், எழுத்தாளர் சு ஸ்ரீ, நவரஞ்சனி ஸ்ரீதர், ஆர்சி நடராஜன், நற்சிந்தனை வட்டம் டாக்டர் பாலன், சாய் சங்கரா பஞ்சாபகேசன் மற்றும் பல இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
திரு கணேஷ் கிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு உதவி போட்டோக்கள் எடுத்து பெருமை சேர்த்தார். அவருக்கு நன்றி.
நிகழ்ச்சி மாலை 6.35 க்கு ராய செல்லப்பா அவர்களின் நல்ல அறிவிப்பு மற்றும் வரவேற்புடன் தொடங்கியது. வித்தியாசமாக நூலாசிரியரான நானே வரவேற்புரை, இணைப்புரை மற்றும் நன்றியுரை எல்லாம் வழங்கி நிகழ்ச்சியை 8.15 க்கு நிறைவு செய்தேன்.
நிகழ்ச்சி தொடங்கும் முன் அனைவருக்கும் தேனில் ஊறிய நெல்லிக்கனி, வேற்கடலை சுண்டல் மற்றும் பனங்கற்கண்டு சுக்கு காபி வழங்கப்பட்டது. அனைவரும் வித்தியாசமான அந்த மாலை ஸ்நாக்ஸ் ருசித்தனர்.
உரத்த சிந்தனை சார்பாக மேடையில் பத்து நூல்கள், திரு பஞ்சாபகேசன் மற்றும் டாக்டர் ஆறுமுகம் பத்து நூல்கள் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் நேரடியாக மற்றும் ஜும் மூலம் கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை பேருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி மலர்களை சமர்ப்பித்து மகிழ்கிறேன்.
இந்த நூலின் விமர்சனம் ஏற்கனவே தினமணி நாளிதழில் பிரசுரம் ஆனது. விரைவில் தினமலரில் வர இருக்கிறது.