வரலாற்றில் இன்று (30.06.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜூன் 30  கிரிகோரியன் ஆண்டின் 181 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 182 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 184 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

296 – மர்செல்லீனுசு திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
763 – பைசாந்தியப் படையினர் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தலைமையில் பல்கேரியப் படையினரை அங்கியாலசில் நடந்த சமரில் வென்றனர்.
1521 – நோவாயின் போரில் பிரெஞ்சு மற்றும் நவார் படைகளை எசுப்பானியப் படைகள் தோற்கடித்தன.
1688 – இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சியைப் பிடிக்க வற்புறுத்தி இளவரசர் வில்லியத்துக்குக் கடிதம் எழுதினர். இது மாண்புமிகு புரட்சிக்கு வழிவகுத்தது.
1737 – உருசியப் படைகள் இராணுவத் தலைவர் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
1859 – பிரெஞ்சுக் கழைக்கூத்தாடி சார்லசு புளொந்தீன் நயாகரா அருவியை கயிறு ஒன்றின் மீது நடந்து கடந்தார்.
1882 – அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற “சார்ல்ஸ் கைட்டோ” தூக்கிலிடப்பட்டான்.
1886 – முதலாவது கண்டம் கடக்கும் தொடருந்து சேவை மொண்ட்ரியாலில் இருந்து புறப்பட்டது. இது சூலை 4 இல் பிரிட்டிசு கொலம்பியாவின் மூடி துறையை அடைந்தது.
1905 – சிறப்புச் சார்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
1908 – துங்குசுக்கா நிகழ்வு: புவியில் மாபெரும் உந்த நிகழ்வு சைபீரியாவில் இடம்பெற்றது. எவரும் உயிரிழக்கவில்லை.
1910 – இலங்கையில் ஐந்து சத செப்பு நாணயம் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டது.[1]
1912 – கனடாவில் ரெஜைனா என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 28 பேர் உயிரிழந்தனர்.
1922 – டொமினிக்கன் குடியரசில் அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளுக்கும் இடையில் வாசிங்டன், டி. சி.யில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1934 – நீள் கத்திகளுடைய இரவு: இட்லரின் அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை செருமனியில் நிகழ்ந்தது.
1936 – எத்தியோப்பியா மீது இத்தாலியின் படையெடுப்பை அடுத்து அபிசீனியப் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி உலக நாடுகள் சங்கத்திடம் நிவாரண உதவி கோரினார்.
1937 – உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியினர் உக்ரைனின் லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: முக்கிய துறைமுகம் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து செர்போர்க் சண்டை முடிவடைந்தது.
1956 – அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் அரிசோனாவில் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்குப் பகுதியில் வானில் மோதிக் கொண்டதில் அவற்றில் பயணம் செய்த அனைத்து 128 பேரும் உயிரிழந்தனர்.
1959 – அமெரிக்க வான்படை விமானம் ஒன்று சப்பானில் ஓக்கினாவாவில் பாடசாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 11 மாணவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
1960 – பெல்சிய கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து காங்கோ குடியரசு (லெயோப்பால்டுவில்) என்ற பெயரில் விடுதலை பெற்றது.
1971 – சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் உயிரிழந்தனர்.
1972 – ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் நொடி அதிகரிக்கப்பட்டது.
1977 – தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது.
1985 – பெய்ரூட்டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 அமெரிக்க விமானப் பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
1990 – கிழக்கு, மற்றும் மேற்கு செருமனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
1994 – பிரான்சில் ஏர்பஸ் ஏ330 இன் சோதனைப் பறப்பின் போது விமானம் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 9 பேரும் உயிரிழந்தனர்.[2]
1997 – முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.
1997 – ஆங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.
1997 – மேலவளவு படுகொலைகள் நடைபெற்றது. சாதிய ஆணவத்தால் 7 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – பிரேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.
2009 – ஏமன் வானூர்தி ஒன்று கொமொரோசு அருகே இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் 152 பேர் உயிரிழந்தனர், 14 வயது பாகியா பக்காரி என்பவர் உயிர் தப்பினார்.[3]
2013 – எகிப்தில் அரசுத்தலைவர் முகம்மது முர்சிக்கும், ஆளும் விடுதலை மற்றும் நீதிக் கட்சிக்கும் எதிரான போராட்டம் ஆரம்பமானது.
2015 – இந்தோனேசியாவின் மேடான் பகுதியில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 116 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

கிமு 156 – ஆனின் பேரரசர் வு, சீனாவின் 7வது ஆன் மரபுப் பேரரசர் (இ. கிமு 87)
1912 – மாதவையா கிருட்டிணன், தமிழக வனவுயிரிப் புகைப்படக்கலைஞர், இயற்கையார்வலர் (இ. 1996)
1919 – நாவற்குழியூர் நடராசன், இலங்கைத் தமிழறிஞர், கவிஞர், வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1994)
1921 – கோ. விவேகானந்தன், தமிழக எழுத்தாளர்
1931 – சித்ராலயா கோபு, தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
1934 – சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ், இந்திய வேதியியலாளர்
1948 – ராஜ ஸ்ரீகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2004)
1964 – மார்க் வாட்டர்ஸ், அமெரிக்க இயக்குநர்
1966 – மைக் டைசன், அமெரிக்க குத்துச்சண்டை வீரர்
1967 – அரவிந்த்சாமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1967 – விக்டோரியா காசுபி, அமெரிக்க-கனடிய வானியற்பியலாளர்
1969 – சனத் ஜயசூரிய, இலங்கைத் துடுப்பாளர்
1983 – செரில் கோல், ஆங்கிலேய நடன அழகி
1985 – மைக்கல் ஃபெல்ப்ஸ், அமெரிக்க நீச்சல் வீரர்

இறப்புகள்

1917 – தாதாபாய் நௌரோஜி, இந்திய அரசியல் சமூகத் தலைவர், பார்சி கல்வியாளர், பருத்தி வணிகர் (பி. 1825)
1919 – சான் வில்லியம் ஸ்ட்ரட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1842)
2007 – சாகிப் சிங் வர்மா, தில்லியின் 4வது முதல்வர் (பி. 1943)
1945 – அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், தென்னிந்தியக் கருநாடக இசைக் கலைஞர் (பி. 1877)
1945 – தஞ்சை க. பொன்னையா பிள்ளை, கருநாடக இசைக் கலைஞர், இசைப் பேராசிரியர் (பி. 1888)
1969 – மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்த இலங்கையர் (பி. 1909)
1975 – விந்தன், தமிழக எழுத்தாளர் (பி. 1916)
2007 – சாகிப் சிங் வர்மா, இந்திய அரசியல்வாதி (பி. 1943)

சிறப்பு நாள்

சிறுகோள் நாள்
விடுதலை நாள் (காங்கோ மக்களாட்சிக் குடியரசு, பெல்ஜியத்தில் இருந்து 1960)
புரட்சி நாள் (சூடான்)
கடற்படை தினம் (இசுரேல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!