‘க.., அ…’ அந்த முழக்கம் அநாகரிகமாக உள்ளது – அஜித்குமார்..!
பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது என அஜித் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்குடன் இணைந்து அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கெஸான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். […]Read More