நடிகர் அர்ஜூன் தாஸ் நடித்த ‘ரசவாதி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 நடிகர் அர்ஜூன் தாஸ் நடித்த ‘ரசவாதி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

மௌன குரு, மகாமுனி போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் சாந்தகுமார். இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ரசவாதி’. இந்த திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், சுஜித் சங்கர், தான்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த், ரம்யா, ஜி.எம் சுந்தர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் சரவண இளவரசு சிவா இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். ‘ரசவாதி’ திரைப்படம் கடந்த மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்த சுஜித் சங்கர் கவனம் பெற்றார்.

சித்த வைத்தியராக சதாசிவ பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் சந்திக்கும் பிரச்னைகளே இந்த திரைப்படத்தின் கதை. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ரசவாதி’  திரைப்படம் நாளை மறுநாள் (ஜூன் 21) ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...