கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 12 | பாலகணேஷ்

 கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 12 | பாலகணேஷ்

‘சிறுகதைகள்’ என்றாலே புதுமைப்பித்தன் தான் முதலில் நினைவுக்கு வருவார். மிக அசாதாரணமான, பிரமிக்க வைக்கும் எழுத்து நடை அவருடையது. அவருடைய இந்த ‘சிற்றன்னை’ புதினத்தால் எழுந்த சிந்தனைப் பொறிதான் இயக்குனர் மகேந்திரன் ‘உதிரிப் பூக்கள்’ என்ற மகத்தான திரைப்படத்தை இயக்குவதற்கான உந்துசக்தி. இந்த ‘சிற்றன்னை’யை முழுமையாகப் படித்தால், புதுமைப் பித்தனின் மற்ற படைப்புகளையும் படித்துவிட விரும்பி தேடியலைவீர்கள் என்பது நிச்சயம்.

சிற்றன்னை

புதுமைப்பித்தன்

சுந்தரவடிவேலு சர்வ கலாசாலையில் பி.ஏ. பரீட்சையில் இங்கிலீஷ் இலக்கியத்தில் பேப்பர் திருத்துபவர். மகன் ராஜா இறந்த பிறகு வேலை பார்‌க்கவே அவருக்குப் பிடிக்க வில்லை. குழந்தை குஞ்சுவின் பொருட்டும் (இரண்டாவது) மனைவி மரகதத்தின் பொருட்டும் வேலைக்குச் சென்று வருகிறார்.

சுந்தரவடிவேலுவின் வேலைக்காரனுக்கு லஞ்சம் கொடுத்து, திருத்திய பேப்பரில் தன் மார்க்கைப் பார்க்க ஆசைப்படும் மாணவன் ஒருவன் அவர் இல்லாத நேரம் வீட்டிற்கு வர, மரகதத்தின் அழகில் மயங்கி, காதலிப்பதாக உளறி, அவளிடம் அடி வாங்கிக் கொண்டு ஓடுகிறான். மரகதம் குழந்தை குஞ்சுவுடன் கொஞ்சி விளையாடியபடி மாடிக்குச் சென்று சுந்தரவடிவேலு வரும் வரை கதவைச் சார்த்திக் கொள்கிறாள்.

குஞ்சுவைப் பார்க்க அவள் தாத்தா வரப் போவதாக சுந்தரவடிவேலு சொல்கிறார். அவர் வேலைக்கச் சென்றபின் மரகதம் உறங்கிக் கொண்டிருக்க, பால்காரனிடம் தானே பால் வாங்கி சின்னம்மாவுக்கு காபி கலக்க எண்ணி சமையலறையை கொட்டிக் கவிழ்த்து அதகளம் செய்கிறது குஞ்சு. அதனால் கோபமாகும் மரகதத்தை ‘அக்கா’ என்று குஞ்சு அழைக்க, ஒரு பூனையைப் பிடித்து குழந்தையின் அருகில் கொண்டு வந்து பயமுறுத்துகிறாள். குழந்தை வீரிட்டு அலற, அப்போது வரும் சுந்தரவடிவேலு, மரகதத்தைத் தள்ளிவிட்டு குழந்தையைத் தூக்கிச் செல்கிறார். அந்த அதிர்ச்சியால் குஞ்சுவுக்கு ஏற்பட்ட ஜுரம் தெளிய மூன்று நாட்களாகிறது. மூன்று நாட்களும் அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்கிறார் சுந்தரவடிவேலு.

நான்காம் நாள் சுந்தரவடிவேலு வேலைக்குச் சென்று மா‌லை திரும்பும் வரை குஞ்சு வீட்டுக்குள் வராமல் தோட்டத்தி லேயே விளையாடிய படி பொழுதைக் கழிக்கிறது. அதைக் கண்டு வருந்துகிறார் சுந்தரவடிவேலு. மனைவியையும் குழந் தையையும் சமாதானப்படுத்துகிறார். மறுநாள் வரும் தாத்தா. சுந்தரவடிவேலுவிடம் குழந்தையைத் தன்னுடன் கிராமத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்கிறார். ரயில் நிலையத்திற்குச் சென்று மரகதமும், சுந்தரவடிவேலுவும் வழியனுப்புகின்றனர். ரயில் முன்னோக்கி நகர, கதை பின்னோக்கி நகர்கிறது.

சுந்தரவடிவேலுவின் இரண்டாவது திருமணம். சிறுவன் ராஜா உற்சாகமாக தன் வயதுச் சிறுவர்களுடனும் குஞ்சுவுடனும் விளையாடி மகிழ்கிறான். திருமணத்தின் பின் மரகதத்தை ‘அக்கா’ என்று குஞ்சு அழைக்க, ‘சித்தி’ என்ற அவள் திருத்துகிறாள். இரண்டு குழந்தைகளும் மரகதத்துடன் நன்கு பாசமாகப் பழக ஆரம்பிக்கின்றனர்.

ஒருநாள் புயல் வர, காற்றும் மழையும் கலந்து அடிக்கிறது. கோடைப் புயல் மின்னலும் இடியும் கிடுகிடு பாய்கின்றன. பால் வாங்கிவர, சிறுவன் ராஜாவிடம் குடையைக் கொடுத்து அனுப்புகிறாள் மரகதம். புயல் காற்றில் தத்தளிக்கும் சிறு வனை, குடையைக் கண்டு மிரண்ட மாடு ஒன்று முட்டி விடு கிறது. மாடு துரத்தியதில் குடையை வீசி விட்டு வெறுங்கை யுடன் வீட்டுக்கு வரும் அவனை, குடையைத் தொலைத்த துடன் பாலும் வாங்கி வராததற்காக மரதகம் அடிக்கிறாள்.

அப்போது சுந்தரவடிவேலு கடுங்கோபத்துடன் வீட்டினுள் வருகிறார். தான் எடுத்து வைக்கச் சொன்ன ஒரு முக்கியக் கடிதத்தை மறந்ததற்காக மரகதத்தைத் திட்டி, கன்னத்தில் அறைந்துவிட்டு, அதை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். ராஜா குறுக்கே வந்து ஏதோ சொல்ல வர, தன்னிலை மறந்தவராய் அவனையும் பூட்ஸ் காலால் உதைத்துத் தள்ளி விட்டுப் போகிறார். அறை வாங்கிய கோபத்தில் மரகதம் தன் அறைக்குச் சென்று கதவைச் சார்த்திக் கொண்டுவிட, சுந்தரவடிவேலுவின் உதை வர்மத்தில் விழுந்ததால் துடிக்கிறான் ராஜா.

மாடு முட்டியது, மழையில் நனைந்த ஜுரம், சுந்தர வடிவேலுவின் உதை எல்லாம் சேர, கஷ்டப்பட்டு மாடி ஏறுகிறான். அவன் வலி புரியாத குழந்தை, அவனை மடியில் ‌படுக்க வைத்துத் தாலாட்ட, குழந்தையின் மேலேயே சரிந்து விழுந்து விடுகிறான் ராஜா. அவன் உயிர் பிரிகிறது. வீட்டுக்குத் திரும்பிய சுந்தரவடிவேலு நடந்தவற்றைக் கண்டு பேரதிரச்சி அடைகிறார்.

ராஜாவின் அந்திமக் காரியங்கள் முடிகிறது. தனிமையில் தன்னிரக்கத்துடன், ராஜாவின் மரணத்துக்குத் தானே காரணம் என்று சுந்தரவடிவேலு பேச, மரகதமோ, ராஜாவின் மரணத்துக்கு அவர் காரணமில்லை, தானே காரணம் என்கிறாள். தெருவில் ஒரு பிச்சைக்காரன் ‘உலகமே பைத்தியக்காரக் கும்பல், காரண காரியத் தொடர்பற்ற குழப்பம்’ என்ற பொருளில் ஒரு பாடலை உச்ச ஸ்தாயியில் கர்ண கடூரமான குரலில் பாடியபடி செல்கிறான்.

முந்தையபகுதி – 11 | அடுத்தபகுதி – 13

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...