இன்று வெயிலின் தாக்கம் குறையும் – தமிழ்நாடு வெதர்மேன்

 இன்று வெயிலின் தாக்கம் குறையும் – தமிழ்நாடு வெதர்மேன்

தமிழ்நாட்டில் இன்றும் சராசரியை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் வெயில் வெளுத்தெடுக்கிறது. பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்டது வெயில். சென்னையிலும் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல்தான் வெயில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் சற்றே ஆறுதலான செய்தியைக் கொடுத்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.

அதன்படி அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னையில் இயல்பான அல்லது அதற்குக் கீழான வெப்ப நிலையே பதிவாகும். கிழக்கிலிருந்து வரும் காற்றே இதற்குக் காரணம். தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் உட்புற தமிழ்நாட்டிலும் கூட வெப்ப நிலை சற்று குறையும்.இங்கெல்லாம் தொடர்ந்து 40 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியல் வரை பதிவாகி வருகிறது. இது 37 டூ 39 டிகிரி செல்சியஸாக குறையக்கூடும்.

தமிழ்நாட்டில் தேர்தல் முடியும் வரை அனல் அலை வீச்சுக்கு வாய்ப்பு குறைவுதான் என்று கூறியுள்ளார் வெதர்மேன். இன்று காலை முதலே சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது. காலையிலேயே கொளுத்தும் வெயிலை சற்று காணோம். இதுவே நல்ல அறிகுறிதான்.. ஒரு பக்கம் தேர்தல் வெப்பம்.. இன்னொரு பக்கம் சூரியனின் சுட்டெரிக்கும் வெயில் என மக்கள் வறுபட்டு வரும் நிலையில் ஒரு வாரத்திற்கு சற்று நிம்மதி கிடைத்தால் சந்தோஷம்தானே..

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...