வந்தது கூகுளின் ‘FIND MY DEVICE’ UPDATE
சான் பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு ஃபைண்ட் மை டிவைஸ் (FIND MY DEVICE) என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.காணாமல் போகும் செல்போன்கள் ,ஹெட்போன்கள் ஆகியவற்றை கண்டுபிடிக்க இந்த அம்சம் பயன்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மட்டும் இந்த ஃபைண்ட் மை டிவைஸ் அம்சத்தை பயனாளர்கள் பயன்படுத்த முடியும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பொறியியல் துறை துணை தலைவரான எரிக் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் புதிய நெட்வொர்க் இணைப்புகள் மூலம் ஆண்ட்ராய்டு கருவிகளை இணைத்து ஃபைண்ட் மை டிவைஸ் என்ற சிறப்பு அம்சத்தை அறிமுகம் செய்கிறோம், இதன் மூலம் உங்களது நொந்துப் போன ஆண்ட்ராய்டு கருவிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் உங்களால் மீட்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்த அம்சம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை, ஆனால் விரைவில் இந்தியாவிலும் இந்த அம்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட முறையில் ஃபைண்ட் மை டிவைஸ் அம்சம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் இதன் மூலம் உங்களது தனிப்பட்ட தகவல்களை வேறு யாராலும் அணுக முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதாவது உங்களது லொகேஷன் தொடர்பான தரவுகள் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் முறையில் சேமிக்கப்படும் என்பதால் உங்களது தனிப்பட்ட தகவல்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாது என கூறுகிறார்.
ஆப்பிளின் ஃபைண்ட் மை என்ற அம்சத்தைப் போலவே இதுவும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உங்களது ஆண்ட்ராய்டு கருவி offline இருந்தால் கூட எளிதாக அது இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ சாதனங்கள் பேட்டரி இல்லாமல் ஆஃப் ஆகி விட்டால் கூட கண்டுபிடித்திட முடியும் என தெரிவித்துள்ளது.
வரும் மே மாதம் முதல் பயனாளர்களால் தங்களது சாவி, வாலட் மற்றும் ப்ளூடூத் ட்ராக்கர் அம்சம் கொண்ட அனைத்து சாதனங்களையும் இந்த நவீன வசதி மூலம் கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த சிறப்பு வசதி எப்படி செயல்படும் என்பதற்கான விளக்கத்தையும் கூகுள் தந்துள்ளது அதாவது நீங்கள் உங்களது ஆண்ட்ராய்டு கருவி அல்லது ப்ளூடூத்துடன் ட்ராக்கிங் வசதி கொண்ட ஒரு கருவியை எங்கேயோ மறந்து வைத்து விட்டீர்கள் அல்லது காணாமல் போய்விட்டது என்ற பட்சத்தில் நீங்கள் உங்கள் போனில் பைண்ட் நியர் பை என்ற பட்டனை அழுத்த வேண்டும் அதன் மூலம் உங்களது அந்த ஆண்ட்ராய்டு கருவி எங்கே இருக்கிறது என்பதை எளிதாக உங்கள் போனில் உள்ள செயலி காட்டிக் கொடுக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.