மரப்பாச்சி – 23 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் 23
வாரம் ஒன்று ஓடியுருந்தது.. ராஜனிடமிருந்து அழைப்பு
“பிருந்தா நாம சந்திக்கற ரெஸ்டாரண்டுக்கு வா”
“ராஜன் நான் சொன்னது ரெடியாச்சா?”
“போனுல வேண்டாம் நேருல வா?”
அவசர அவசராமாய் உடை மாறி காளிராஜை காரை எடுக்கச் சொல்லி கிளம்பினாள் ரெஸ்டாரண்டுக்கு. பிருந்தா போவதற்கு முன்பே ராஜன் அங்கே இருந்தான். அவன் இருந்த மேஜைக்கு முன் சென்று அமர்ந்தாள். ராஜன் காஃபி ஆர்டர் செய்தான். சர்வர் விலகியதும் அந்த சிறிய அட்டைப் பெட்டியை அவள் கையில் கொடுத்தான் ராஜன். கொடுத்தவன் கூறினான்..
“பிருந்தா நீ கேட்டது எல்லாம் இதுல இருக்குது”
“தேங்க்ஸ் ராஜன்” பிருந்தாவின் கண்கள் கலங்கியது.
“நன்றி எல்லாம் எதுக்கு பிருந்தா? கண்ணு வேற கலங்குது?”
“ஏன் ராஜன் மனுஷங்க இப்படி ஆயிட்டாங்க?”
“சிம்பிள் பிருந்தா இது கலிகாலம்.இந்த மாதிரி ஒரு கயவனுக்கு முடிவு கட்டுறதுல என்னோட பங்கும் இருக்குதுன்னு நெனச்சு சந்தோஷப் படுறேன் நான். சேஃபா காரியத்தை முடி. எந்த உதவின்னாலும் என்னை கூப்பிடு”.
அவனை நன்றி ததும்பும் முகமாய் பார்த்தவள். இவனும் ஆண்தான், கணேஷும் ஆண் தான் என்ன ஒரு முரண்பாடு. இவன் மனிதன் அது மிருகம்.
காஃபியை குடித்தவர்கள் எழுந்தனர். அவள் காரிலும் அவன் தன் பைக்கிலும் கிளம்பினர்.
கணேசுக்கு முடிவு கட்டும் அந்த நாள் வந்தது. கணவன் ஆபீஸ் டூர் விஷயமாய் இரண்டு நாள் வெளியூர் பயணம் செல்வதாகக் கூறிக் கிளம்பினான். கூடவே சுந்தரமும் கிளம்பினான். வீட்டில் ப்ரியா மட்டும். கடவுளை மனதில் வணங்கியவள் ‘இறைவா எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும்’ என்று தியானித்துக் கொண்டு செல்லை எடுத்து கணேசுக்குப் போன் செய்தாள்..இரண்டு ரிங் சென்றதும் தொடர்பில் வந்தான் கணேஷ்..
“கணேஷ் நான் பிருந்தா பிரியாவோட சித்தி”
“ஓ..சர்ப்ரைஸ் என்ன விஷயம் ப்ரியாவை திரும்பவும் என்னோட ட்யூஷனுக்கு அனுப்புறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?”
“இல்லை இல்லை அதுக்கு போன் பண்ணலை நான்”
“வேற என்ன?”
“பிருந்தாவுக்கு இன்னிக்கு பர்த் டே செலிப்ரேட் பண்ணுறோம் ப்ரியா நீங்க வரணும்னு ஆசைப் படுறா?”
“இத்தனை வருஷம் கூப்பிடாதவ இன்னிக்கு கூப்பிடுறா அதிசயமா இருக்குது?”
“உங்க ட்யூஷன்ல இருந்து நின்னுட்டாளா உங்களை மறக்க அவளால முடியலை. நீங்க அவ்வளவு நல்லது அவளுக்குப் பண்ணியிருகறீங்க அந்த நன்றிக்கடனா இருக்கும். நீங்க கண்டிப்பா வரணும்” இரட்டை அர்த்ததில் பேசினாள் பிருந்தா.
“இவ்வளவு தூரம் ப்ரியா ஆசைப் படுறதால நான் கண்டிப்பா வர்றேன்”
“ஓ தேங்க்யூ சார்”
“சரி உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க”
தங்கள் வீட்டின் முகவரியை அவனுக்குக் கூற மனதில் பதிந்து கொண்ட கணேஷ் பை சொல்லி தொடர்பை துண்டித்தான்.
‘வாடா வா காத்திருக்கிறேன்’ என்று வாய்விட்டுக் கூறிக் கொண்டாள் பிருந்தா.
பிருந்தா காளிராஜை அழைத்து அன்று நடக்கப் போவது அனைத்தையும் கூறினாள்..
“எதுக்கு அண்ணி கொக்கு தலையில வெண்ணை வச்சுப் புடிக்கணும். அந்த வெறி புடிச்ச நாயை அடிச்சு கொன்னுட்டு நான் ஜெயிலுக்குப் போறேன். ஐயா மகளை நாசமாக்குன பாவியை அன்னிக்கே நீங்க கண்ணுல காட்டியிருந்தா நான் அவனை அங்கயே கொண்ணு போட்டிருப்பேன்”
“அதனால தான் நான் அன்னிக்கு உங்ககிட்டச் சொல்லலை. காளிராஜ் எல்லாரும் இப்ப குடும்பம் ஆயிட்டோம். இந்த மாதிரி வெறி புடிச்ச மிருகத்தை கொன்னுட்டு யாரும் தன்னோட வாழ்க்கையை அழிச்சுக்கக் கூடாது.ஆனாலும் இவனுக்குத் தண்டனை குடுக்கணும். அந்தத் திட்டத்தை நான் இன்னிக்கு அரங்க்கேற்றப் போறேன்”
“சரி அண்ணி நான் என்ன செய்யணும்?”
“இன்னிக்கு ப்ரியாவுக்கு பிறந்தா நாள்னு சொல்லி அவனை இங்க வரவைக்கணும். அவன் வந்து பார்க்கும் போது வீடு பிறந்த நாள் கொண்டாடுற மாதிரி இருக்கணும் அதுக்குண்டான டெகரேஷன் திங்க்ஸ் கேக் எல்லாம் வாங்கிட்டு வாங்க”
பிருந்தா பணம் எடுத்து கொடுத்தாள் அதைப் பெற்றுக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு பஜாருக்குக் கிளம்பினான் காளிராஜ்.
மணி ஆறு.. காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது..பரபரப்பானாள் பிருந்தா.. அழகிய பட்டுப் புடவை அணிந்திருந்தாள் அவள். மாடி அறையில் ப்ரியா மாலையில் அருந்திய டீயில் அபாயமில்லாத தூக்க மாத்திரையை கலந்து கொடுத்திருந்தாள் அவளுக்கு. அவள் தூங்கியதும் பிறந்த நாள் கொண்டாடுவது போன்ற தோற்றத்தை வீட்டில் அவளும் காளிராஜும் சேர்ந்து உருவாக்கினார்கள்.
கதவைத் திறந்தாள் பிருந்தா. கையில் அழகிய பொக்கேவுடன் வெள்ளை ஜீன்ஸ் கறுப்பு டி ஷர்ட்டில் நின்று கொண்டிருந்தான் கணேஷ்.
“ஓ கணேஷ் சொன்னபடி வந்துட்டீங்களே தேங்க்ஸ்”
“என்னோட ஸ்டூடண்ட் இன்வைட் பண்ணி வராம இருந்தா நல்லாவா இருக்கும்”
என்றவன் வீட்டை நோட்டம் விட்டான்.. “இன்னும் யாரும் வரலையா?”
“இப்ப வந்துடுவாங்க”
“உங்க வீட்டுக்காரர் எங்க?”
“நைட் டின்னர் சொல்லியிருந்ததை எடுத்துட்டு வரப் போயிருக்கறார்”
“நைஸ் ஹவுஸ்” என்றான் கணேஷ்..
அவனை இருக்கச் சொல்லிவிட்டு கிச்சன் சென்றவள் கையில் கிளாஸ் அதில் ஆரஞ்ச் ஜூஸ் ததும்பியது..
“இதைக் குடிங்க அப்புறம் வீட்டைச் சுற்றிக் காண்பிக்கிறேன்”
க்ளாசை வாங்கி உதட்டுக்குக் கொடுத்தான். ஜூசை மடமடவென்று உள்ளே இறக்கினான். வினாடிகள் நிமிடத்தைத் தொடும் முன் மயங்கிச் சாய்ந்தான் சோஃபாவில். மயங்கி விழுந்தவனின் கால்களை இழுத்து சோஃபாவில் நேராக படுக்க வைத்தாள் பிருந்தா..அவன் கன்னத்தைத் தட்டினாள்..பேச ஆரம்பித்தாள்..
“என்ன மிஸ்டர் கணேஷ் எப்படி இருக்கற? நான் பேசுறது உன் மூளைக்குப் புரியும் ஆனா உன் உடம்பை நீ ஒரு இஞ்ச் கூட நகத்த முடியாது.ஏன்னா நான் ஜூசுல கலந்த கெமிக்கல் அப்படி. என்னோட நண்பன் ராஜன் ஒரு இளம் சயிண்டிஸ்ட் அவன் ராப்பகலா உனக்குன்னே கண்டு புடிச்ச ஐட்டம் இது. என் பொண்ணுக்கு நீ மயக்க மருந்து குடுத்து தானே அவளை சீரழிச்ச?”
கணேசின் விழிகள் அசைந்தது.பிருந்தா தொடர்ந்தாள்’.. “அது எப்படி கஃபி குடிக்க யாரும் காஃபிஷாப்பை வாங்குவாங்களா? ஒரு பொம்பளைக் கிட்டயே ரெட்டை அர்த்ததுல பேசுற?. எத்தனை பிஞ்சுகளை நீ சிதைச்சியோ தெரியலை.இனி உன்னால பெண்களுக்கு ஆபத்து வரகூடாது உன்னை ஒரு நிமிஷத்துல இப்ப என்னால கொல்ல முடியும் ஆனா உன்னைக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனா ஏன் எதுக்குன்னு கேள்வி வரும். என் பொண்ணு உன்னால கெட்டுப் போனது மீடியாவுல வந்து நாறும். அது இல்லாம உனக்கு தண்டனை தரணும்னு நெனச்சேன் நெட்டுல தேடுனேன் கிடைச்சது இந்த ஐடியா” என்றவள். ராஜன் கொடுத்த அந்த சிறிய அட்டைப் பெட்டியை எடுத்தாள். அதில் ஒரு சீசாவும் சிரிஞ்சும் இருந்தது..
“இது என்னன்னு பார்க்கறியா கணேஷ்.. அமெரிக்காவுல பெண்களை கற்பழிக்கறவங்களுக்கு தண்டனை என்ன தெரியுமா? உனக்குத் தெரியாது.நான் சொல்லுறேன் கேட்டுக்க. ஒண்ணு மரண தண்டனை இன்னொண்ணு ஆண்மை நீக்கம். இப்ப நான் உனக்கு செய்யப்போறது ஆண்மை நீக்கம்”
கணேஷ் உள்ளுக்குள் வெடித்துச் சிதறினான்.பிருந்தா தொடர்த்தாள்..
“என் நண்பன் ராஜன் கண்டு பிடிச்ச வேதியல் கூட்டு இந்த பாட்டிலுல இருக்குது அதை நான் இப்ப உனக்கு இஞ்செக்ட் பண்ணப் போறேன். அதை நான் போட்ட பிறகு உன்னால இனி எந்தப் பெண்ணையும் காம இச்சையோட தொட முடியாது. இந்த ஜென்மத்துல உன்னால எந்தப் பெண்ணுக்கும், பிஞ்சுக் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை குடுக்க முடியாது”
என்று கூறியவள் சிரிஞ்சில் அந்த மஞ்சள் திராவத்தை ஏற்றினாள். கணேசால் எந்த எதிர்ப்பும் காட்ட முடியவில்லை வெட்டுப்பட்டு விழுந்த வாழை மரமாய் கிடந்தான் அவன். அவன் புஜத்தில் சிரிஞ்சை சொருகினாள். அந்த கெமிக்கல் அவன் உடலுக்குள் பாய்ந்தது. உடலெங்கும் ஒரு நெருப்பு ஆறு பாய்ந்தது கணேசிற்குள்.வலி அவன் கண்களில் பிரதிபலித்தது. பிருந்தா கேட்டாள் வலிக்குதாடா? என் பொண்ணும் ஆஸ்பத்திரியில இப்படித்தான் தனக்கு என்ன நடக்குதுன்னே தெரியாம வலியில துடிச்சா. என் புருஷன் மகளுக்கு இப்படி ஆயிட்டேன்னு மன வலியில துடிச்சார். நான் ஒரு வளர்ப்புத் தாயா என் கடமையில இருந்து தவறிட்டேன்னு துடிச்சேன். அந்த வலிகளுக்கு இன்னிக்கு எங்களுக்கு ஒரு ஒத்தடம் குடுத்திருக்கிறேன்.இப்ப உன்னைத் தூக்கிட்டுப் போய் எங்கயாவது ரோட்டு ஓரம் போட்டிருவார் என் ட்ரைவர். முழிச்ச உன்னால எங்களை ஒண்ணும் செய்ய முடியாது. திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி நீ இதை யாருக்கும் சொல்ல முடியாது”
செல்லை எடுத்தவள் ராஜனுக்குப் போன் செய்தாள்.
“ராஜன் குற்றத்துக்கான தண்டனையை நிறைவேற்றிட்டேன்”
“வெல்டன் பிருந்தா.அவனை அடுத்து என்ன செய்யப் போற?’
“காளி ராஜ் ரெடியா தெரு முனையில காரோட நிற்கறார் இவனை எங்கயாவது ஆள் நடமாட்டம் இல்லத இடத்துல டிஸ்போஸ் செய்ய!”
கூறிவிட்டு ராஜனின் இணைப்பைத் துண்டித்தாள். துண்டித்துவிட்டு. காளிராஜிற்கு போன் செய்துவிட்டு. சோஃபாவில் சாய்ந்தாள் காளிராஜின் வருகைக்காக.
(-தொடரும்…)
முந்தையபகுதி – 22 | அடுத்தபகுதி – 24