‘கலைஞர் 100′ இடம், தேதி மாற்றம்..! | சதீஸ்
‘கலைஞர் 100’ விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், தற்போது கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்ததுறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கலைஞர் 100 என்ற மாபெரும் கலைஞர் நூற்றாண்டு விழா வரும் 24.12.2023 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்திருந்தது.
இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் கனமழை பெய்த நிலையில், மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளதாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே இதனை கருத்தில் கொண்டு டிச. 24-ம் தேதி நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா 06.01.2024 சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.
இந்நிலையில், கலைஞர் 100 விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து, கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சிக்கோப்பை போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளதாலும், இடவசதிக்காகவும் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.