“உரை மருந்து” மறந்துட்டோமே
“உரை மருந்து” மறந்துட்டோமே
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள் நம்மிடம் இருந்தன. இவை, தற்போது `வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன. குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது.
கிட்டத்தட்ட 16 வகையான வேக்ஸின்களை வலியுறுத்தும் மருத்துவச் சமூகம், நம்மிடையே இருந்த 23 நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை அதன் ஆழத்தையும், மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல், மறக்கச் செய்துவிட்டது.
இந்தக்கால தாய்மார்கள் பலருக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவிடமோ அல்லது பாட்டியிடமோ இதை பற்றி கேட்டால், அவர்கள் சொல்வது இதுவாக தான் இருக்கும், “ஆம் அந்தக்காலத்தில் நாங்கள் உரை மருந்து கொடுக்காமல் குழந்தைகளை வளர்த்ததில்லை“. இந்த அறிய பொக்கிஷத்தை மூடநம்பிக்கை, நேரமின்மை, சரியான புரிதல் இன்மை மற்றும் நம் முன்னோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று நினைப்பது இப்படி பல காரணங்களால் மறந்துவிட்டோம். நாங்கள் நீங்கள் இதை செய்தே ஆகவேண்டும் என்று உங்களை வற்புறுத்தவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையின் நன்மைக்காக இந்த மருத்துவ முறை பற்றி சிறிது ஆராய்ந்து பின்னர் முடிவு எடுங்கள்.
அந்தக்காலத்தில் மருத்துமனைக்கு குழந்தைகளை தூக்கி சென்றதே இல்லை என்ற நிலை தற்போது மாறி இருப்பதை பற்றி சிந்தித்து பாருங்கள்.
உரை மருந்து என்றால் என்ன?
இயற்கை மருந்துகள் சிலவற்றை உரைகல்லில் உரைத்து குழந்தைகளுக்கு புகட்டுவது.
எவை எவை உரை மருந்தாகிறது?
1.வசம்பு
2.கடுக்காய்
3.மாசிக்காய்
4.சித்தரத்தை
5.ஜாதிக்காய்
6.சுக்கு
*மஞ்சள்(தேவை என்றால்)
எப்படி உபயோகப்படுத்துவது?
முதலில் மேற்கூறப்பட்டுள்ள மருத்துகளை ஒரு கப் தண்ணீர் அல்லது தாய்பால் விட்டு கொதிக்க விடவும். பிறகு ஒரு கப் தண்ணீர் அரை கப் அளவான உடன், தண்ணீரை வடிகட்டி விட்டு மருந்துகளை நிழலில் உலர்த்தி காற்று புகாத மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மருந்துகளை உரைகல்லில் தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு உரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மருந்தையும் இரண்டு முதல் பதினைந்து முறை வரை உரைக்கலாம்.(வசம்பை தவிர)
உரைத்து எடுத்த மருந்தை பாலாடையில் விட்டு மேலும் சிறிது தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு குழந்தைக்கு புகட்ட வேண்டும்.
எப்போது கொடுக்க