நித்திய கல்யாணி பயன்கள்வாழ்க்கை முறை
நித்திய கல்யாணியின் இலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும். இதன் படத்தை பார்க்கும் பொழுதே உங்களுக்கு இந்த செடியை நிறைய இடங்களில் பார்த்தது நினைவில் வரும்.ஆனால் இதன் மகத்துவம் அறியாததால் இதனை பாதுகாக்க மறந்து விட்டோம். இந்தியாவில் சில மாநிலங்களில் இந்த நித்ய கல்யாணி செடியை வணிக ரீதியாக பயிர் செய்கின்றனர். நித்ய கல்யாணி செடியின் அணைத்து பாகங்களும் நன்கு பதப்படுத்தப்பட்டு அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நல்ல உள்ளம் கொண்ட மானுடம் போலவே, இது எந்த சூழலிலும் தன்னை மாற்றி கொள்ளாமல் அதே தன்மையுடன் தளராமல் வளரக்கூடியது. நித்ய கல்யாணி பூத்து குலுங்க எந்த வித கட்டுப்படும் வைத்து கொள்வது இல்லை. ஆண்டின் அணைத்து மாதங்களிலும் பூத்து குலுங்கி மகிழ்ந்து கொண்டே உள்ளது. நாம் ஊர்களில் சுடுகாடு, கல்லறை போன்ற இடங்களில் வளர்வதால் இதற்கு சுடுகாட்டு பூ, கல்லறை பூ என்ற பெயர்களும் உண்டு. கல்லறையில் வளர்ந்தால் என்ன காடுகளில் வளர்ந்தால் என்ன நித்ய கல்யாணி அவள் குணத்தை மாற்றிகொள்ளவதே இல்லை. நித்ய கல்யாணியின் மருத்துவ மகத்துவம் அறிந்து கொண்டால் இனி உங்கள் இல்லத்திலும் வாசம் செய்வாள். உடலில் ஏற்படும் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மன ரீதியான நோய்களுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது.மாதவிடாய் காலங்களில் ஏற்படும் நோய்கள் பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது. நித்ய கல்யாணி நமது நாடி நடையை சமன் செய்ய உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகிறது , இதன் மருத்துவ குணம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. நித்ய கல்யாணியில் இருந்து எடுக்கப்படும் மூலப் பொருட்கள் கொண்டு புற்று நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.அதிக தாகம் தீர்க்கும். அதிக சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்தும்.நித்ய கல்யாணி உடல் சோர்வை நீக்கும் தன்மை கொண்டது.பசியின்மைக்கும் நல்ல மருந்தாக இருக்கிறது நித்ய கல்யாணி.
நித்ய கல்யாணியின் ஐந்து அல்லது ஆறு பூவை எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு நன்கு காய்ச்சவும், நீர் பாதியாக வரும் வரை காய்ச்சவும். பின் இந்த நீரை ஒரு நாளைக்கு நான்கு அருந்தி வரலாம். நித்ய கல்யாணி வேர் சூரணத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து நாளைக்கு மூன்று முறை அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.