அழகே அழகு

 அழகே அழகு

துளசி இலையை எடுத்து நன்கு காயவைத்து போடி செய்து அதில் மஞ்சள்தூள் கலந்து குளிப்பதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்யவும் நன்கு உலர்ந்த பிறகு குளித்தால் சில நாட்களிலேயே பருக்களும் வடுக்களும் காணாமல் போய்விடும்.

ஆலிவ் எண்ணெய்யை சூடாக்கி தினசரி தேய்த்து ஆறு மணி நேரம் கழித்துக்குளித்தால் தலைமுடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும். 

உப்பு கொண்டு ஸ்க்ரப் செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் சொரசொரப்பாக இருக்கும் சருமம் போன்றவை நீங்கும். சரும வறட்சியைப் போக்கி மென்மையாக மாறும்.

ஆலிவ் ஆயிலுடன் உப்பு சேர்த்து பாதங்களில் தடவி ஊற வைத்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் பாதம் வெடிப்பு போகும் அழகை மாறும்.

முகம் பளபளப்பாக இருக்க குளிர்ந்த ரோஸ் வாட்டரை முகத்தில் தடவினால் போதும். மேக்கப் ரிமுவ் செய்யத் துளி தேங்காய் எண்ணையுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தலாம்.  

பொடுகு தொல்லை நீங்க நான்கு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை லேசாக சூடாக்கி மிக்ஸியில் பொடித்து வெந்நீரில் ஊறவைக்கவும். நன்கு ஊறிய பிறகு அதனுடன் கால் கப் தயிர் கலந்து தலையில் தடவி பதினைந்து நிமிடம் ஊறவிட்டு அலசவும் பொடுகு உடனே நீங்கி விடும். 

உளர் திராட்சைப் பழங்களை வெதுவெதுப்பான நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் இதய நோய் நீரும். 

முடி வேகமாக வளர நெல்லிக்காய் கொட்டைகளுடன் இளநீர் மற்றும் வெள்ளம் நூறு கிராம் சேர்த்து அரைத்து வடிகட்டி குடித்து வர இரும்பு சத்து அதிகமாகும். இதன் மூலம் முடி கொட்டுவது நின்று வேகமாக வளர தொடங்கும். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...