ஆபத்தாகும் ஆசிரியப்பணி

                      நேற்றைய சம்பவம் என் நெஞ்சை பதம் பார்த்ததின் விழைவு தான்  இந்த வரிகளை நான் அரங்கேற்ற காரணம் . தாம்பரத்தில் இயங்கும் அரசு உதவி பெரும் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் தன் ஓய்வு அறை கழிவறையில் இருந்த கிருமிநாசினியை குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .சிகிச்சை அளிக்கப்பட்டு  காப்பற்றப்பட்ட நிலையில் அவரிடம் காரணம் கேட்ட போது அவரளித்த பதில் நம்மை நிச்சயம் கலங்கச்செய்யும் .

        ” நான் கடந்த 25 வருடங்களாக இப்பள்ளியில் பனி புரிந்து வருகிறேன் .அனால் கடந்து 2 மாதங்களாக தலைமை ஆசிரியரும் ,செயலரும் என்னை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டனர் . என்னை  மற்ற ஆசிரியர்கள் முன்பாக ஒருமையில் பேசி அவமானப்படுத்தினர்.பணியிடை நீக்கம் செய்தனர்   ” என்று கூறி அழுதுள்ளார் . மற்ற ஆசிரியர்களும் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி உள்ளனர் .எதற்காக இத்தகைய அவலம் ?

                  மாணவர்களுக்கு சிறந்த அறிவை போதிக்கும் களமாக இன்று எத்தனை  பாடசாலைகள் திகழ்கின்றன …? எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என ஒளவை பாடிய பாக்கள் இன்று வெறும் ஏடுகளில் மட்டும் முடங்கிப்போக  காரணம் என்ன…? வாழ்க்கை படகை சீராக அமைக்க அடித்தளம் இடும் ஆசிரியர்களின் இன்றைய நிலை என்ன ..? என்ற பல விடயங்களுக்கு விடை காண புறப்படுகிறது என் பேனா

             ஆசிரியப்பணியே அறப்பணி அதற்காய் உன்னை அர்ப்பணி என கூறப்பட்ட முதுமொழிகள்  இன்று மங்கிப்போய் கொண்டிருக்கிறது என்பதே  உண்மைதலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் அவர்கள் வாழ்க்கையில் தொலைக்கும் பெரும்பகுதி பொழுதுகள் சந்திப்புக் கூட்டங்களிலேயே முடிகிறது. ஒரு வாரத்தில் வகுப்பறையில் இருக்கும் நேரத்துக்கு ஈடான நேரத்தை அவர்கள் அதே வாரத்தில்மீட்டீங்குகளில்செலவிடுகிறார்கள். இதில் பள்ளி அளவிலான சந்திப்பும் மாவட்ட மாநில அளவிலான சந்திப்புகளும் அடங்கும்.

                                 இவை தவிர, நவீன கல்வி என்கிற பெயரில் பலவகை தரவுகளையும் தகவல்களையும் மின்னியல் முறையில் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்புவதில் செலவிடப்படும் Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!