இன்று 7-வது மொபைல் மாநாடு பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைக்கப்பட உள்ளார்…

 இன்று 7-வது மொபைல் மாநாடு பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைக்கப்பட உள்ளார்…

7-வது இந்திய மொபைல் மாநாடு 2023 (7th Edition of the India Mobile Congress (IMC) 2023) இன்று பிரதமர் மோடியால் டெல்லியில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்களுக்கு 100 ‘5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் மோடி வழங்குகிறார்.

டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று காலை 9:45 மணிக்கு 7 வது இந்திய மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 ‘5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். 100 ‘5 ஜி ஆய்வகங்கள்’ முன்முயற்சியின் கீழ் இந்த ஆய்வகங்கள் உருவாக்கப்படுகின்றன.

100 ‘5 ஜி ஆய்வகங்கள் முன்முயற்சி’, இந்தியாவின் தனித்துவமான தேவைகள், உலகளாவிய தேவைகள் ஆகிய இரண்டையும் பூர்த்தி செய்யும் 5 ஜி பயன்பாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் 5ஜி தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய வாய்ப்புகளை அடைவதற்கான ஒரு முயற்சியாகும். இந்த தனித்துவமான முயற்சி கல்வி, வேளாண்மை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து போன்ற பல்வேறு சமூக பொருளாதாரத் துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கும் மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் நாட்டை முன்னணியில் கொண்டு செல்லும்.

நாட்டில் 6 ஜி-யில் கல்வி மற்றும் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் இந்த முன்முயற்சி ஒரு முக்கிய படியாகும். மிக முக்கியமாக, இந்த முன்முயற்சி தேசிய பாதுகாப்புக்கு முக்கியமான உள்நாட்டு தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஒரு படியாகும்.

இந்தியா மொபைல் மாநாடு ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்ப அமைப்பாகும். இது அக்டோபர் 29-ந் தேதி வரை நடைபெறும். தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் சிறப்பான முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்தவும், குறிப்பிடத்தக்க அறிவிப்புகளைக் கொண்டு வரவும், புத்தொழில்கள் தங்கள் புதுமையான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளைக் காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கவும் இந்த நிகழ்வு ஒரு தளமாக செயல்படும்.

உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு’ என்ற கருப்பொருளுடன், இந்திய மொபைல் மாநாடு 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாட்டாளர், உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக நாட்டின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மூன்று நாள் மாநாடு 5 ஜி, 6 ஜி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற தொழில்நுட்பங்களை முன்னிலைப்படுத்தும், செமிகண்டக்டர் தொழில்துறை, பசுமை தொழில்நுட்பம், இணையதள பாதுகாப்பு போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கும்.

இந்த ஆண்டு, இந்திய மொபைல் மாநாடு ‘ஆஸ்பயர்’ என்ற புத்தொழில் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது புதிய தொழில்முனைவோர் முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் புத்தொழில்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவப்பட்ட வணிகங்களுக்கு இடையிலான தொடர்புகளை வளர்க்கும்.

இம்மாநாட்டில் சுமார் 5000 தலைமை நிர்வாக அதிகாரி நிலையிலான பிரதிநிதிகள், 230 கண்காட்சியாளர்கள், 400 புத்தொழில் நிறுவனங்கள், துறைச் சார்ந்தோர் உட்பட சுமார் 22 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...