வேளச்சேரியில் தீ விபத்து…
சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டி வரும் 9 மாடி கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. கட்டடம் தற்போது பற்றி எரிந்து வருகிறது. இதனால் வேளச்சேரி-தாம்பரம் மெயின் ரோட்டில் கரும்புகை சூழ்ந்த நிலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் போக்குவரத்து என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடம் மொத்தம் 9 தளங்களை கொண்டுள்ளது. தரை தளத்துடன் சேர்த்தால் இந்த கட்டடம் என்பது 10 தளங்களுடன் செயல்பட உள்ளது. தற்போது இதில் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
இன்னும் 20 சதவீத பணிகள் என்பது மீதம் உள்ளது. இந்த கட்டடம் என்பது வேளச்சேரி -தாம்பரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. அதாவது வேளச்சேரியில் உள்ள சென்னை சில்க்ஸ் அருகே இந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று மாலையில் திடீரென்று அந்த கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுத்தடுத்து ஒவ்வொரு தளங்களுக்கும் வேகமாக பரவியது. இதனால் 9 மாடி கட்டடமும் வேகமாக தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தான் அந்த கட்டடத்தில் தீயின் தாக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வேளச்சேரி -தாம்பரம் சாலையில் கரும்புகை சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
மேலும் வேளச்சேரி-தாம்பரம் சாலை என்பது சென்னையின் முக்கிய ரோடாக உள்ளது. இதனால் ஏராளமானவர்கள் வழக்கம்போல் பயணம் செய்தனர். குறிப்பாக மாலை நேரத்தில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் அதிகமாக பயணித்தனர். ஆனால் தீயால் ஏற்பட்ட கரும்புகையால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதோடு வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து வேளச்சேரி-தாம்பரம் சாலையில் போக்குவரத்து என்பது மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் கட்டடத்தில் பிடித்த தீ என்பது இன்னும் அணைக்கப்படவில்லை. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் இனு்று வேளச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.