ஆக., 19ல், ‘உலக புகைப்பட நாள்’
புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆக., 19ல், ‘உலக புகைப்பட நாள்’ கொண்டாடப்படுகிறது.
கடந்த, 19ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், லுாயிசு டாகுவேரே என்பவர், டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாடு முறையை வடிவமைத்தார். பின், 1839 ஜன., 9ல் பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ல், பிரான்ஸ் நாட்டு அரசு டாகுரியோடைப் செயல்பாடுகளை, ‘ப்ரீ டூ தி வேர்ல்டு’ என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.
போட்டோ என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அலாதியான பிரியம் உணடு. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று எத்தனையோ விதமான கேமராக்களுக்கும், செல்போன்களில் செல்ஃபிகளும் நம்மை ஆட்கொண்டிருந்தாலும், பள்ளி காலங்களில் பஸ் பாஸ், தேர்வு ஹால்டிக்கெட், நண்பர்களுடனான பிளாக் அன் ஒயிட் குழு புகைப்படங்கள் இன்றும் நம் வீட்டு அலமாரியை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
மனிதனின் மூன்றாவது கண்ணாக இருந்து நம் உணர்வுகளை, நிழலாக வடிக்கும் புகைப்படங்களை எடுக்கும் கலைஞர்களை சிறப்பிக்கும் நாளாகவே ஆகஸ்ட் 19 தேதியை உலக புகைப்பட தினமாக கொண்டாடுகிறோம்.