கொன்று விடு விசாலாட்சி – 5 | ஆர்னிகா நாசர்

 கொன்று விடு விசாலாட்சி – 5 | ஆர்னிகா நாசர்

அத்தியாயம் – 5

பிளாஷ்பேக்சம்பவம் 1- சம்பவத்தேதி 10.06.1966 இரவு.

விசாலாட்சி பதினெட்டு வயதில் இளமையின் உச்சத்தில் சந்தன மின்னலாய் மிளிர்ந்தாள்.

தோழிகளுடன் காவிரியில் நீந்தி களித்தவள்- மாலை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி பக்தியில் திளைத்தவள்- பிள்ளையாருக்கு பூகோர்த்து மாலையிட்டு நல்ல கணவன் அமைய வேண்டிக் கொண்டவள் இன்று திருமணத்தளைக்குள் சிக்கிப் போனாள்.

மணவறையிலேயே மாப்பிள்ளையை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டாள். பெருமிதமும் ஆனந்தமும் பொங்கின.

‘ஜெமினி கணேசன் மாதிரில்ல அழகா இருக்காரு!’

புரோகிதர் மந்திரங்களை ஓங்கி உச்சரித்துக் கொண்டிருக்கும் போதுதான் அது நடந்தது.

‘நறுக்!’

பட்டுப்புடவையுடன் சேர்த்து கை நகம் அடையாளம் தெரியாமல் லாவகமாக விசாலாட்சியின் தொடையில் கிள்ளினான் சீனிவாசன்.

எறும்பு கிறும்பு கடித்துவிட்டதோ எனத் துள்ளத்துள்ளியவள் சீனியின் கண் சிமிட்டலில் அதிர்ந்து போனாள். நான்தான் கிள்ளினேன் என கண்சிமிட்டி சமிக்ஞை செய்தான்.

நொடியில்  விசாலாட்சியின் மகிழ்ச்சி வரண்டு போனது. லேசாக பயம் எட்டிப் பார்த்தது.

இன்னும் தாலி கூட கட்டவில்லை. அதற்குள் கணவனாகப் போகிறவன் கிள்ளுகிறான். கிள்ளலில் காதலோ காமமோ இல்லை. அதற்குப் பதிலாக இனம் தெரியாத விபரீதம்தான் கூத்தாடுகிறது.

இந்த சீனிக்குள் என்னென்ன மர்மங்கள் ஒளிந்துள்ளனவோ?

மந்திரமும் நாதஸ்வரமும் உச்சத்தில் முழங்க- அட்சதை அரிசிகள் தூவப்பட சீனிவாசன் விசாலாட்சி கழுத்தில் மங்கல நாணை பூட்டினான். மூன்றாவது முடிச்சு இட்டவன் பின்னங்கழுத்தில் பட்டென்று அடித்து கைகளை எடுத்தான். எத்தனை பெரிய கல்யாணக்கூட்டம். யாருமே அவன் அடித்தததை பார்க்கவில்லை. இம்முறை விசாலாட்சிக்கு திகில் கூடியது.

சீனியோ குறும்பு கொப்பளித்தான்.

சாந்தி முகூர்த்த அறை.

பட்டுப்புடவை சரசரக்க பால் செம்புடன் நடந்தாள் விசாலாட்சி. அவளுடன் பாவாடைத்தாவணி தோழிகள் சிரித்தபடி, ஜோக் அடித்தபடி, பொறாமை பார்வை பார்த்தபடி, தான் பால் செம்புடன் உள்ளே போவது போல் கனவு கண்டபடி-தோழிகள்.

மெதுவாக மிக மெதுவாக உள்ளே நுழைந்தாள்.

நுழைந்ததுதான் தாமதம் கதவு உட்புறமாய் தாளிடப்பட்டது. விளக்கு அணைந்தது.

பயந்து போனாள்.

சில நொடிகளில் வெளிச்சம் மீண்டது.

பட்டுவேட்டி பட்டு சட்டையில் சீனிவாசன் நின்றிருந்தான். “ரொம்ப பயந்துட்டியோ… காலைல கிள்ளு தட்டு…. ராத்திரி விளக்கை அணைச்சு விளையாட்டு…. அதுதான் சீனி… எங்கப்பன் ஆத்தாகிட்ட கூட நெருங்னதில்லை. தள்ளியே நிப்பேன்… நண்பர்களும் அதிகம் இல்லைகின்ற அளவு… எனக்கு முழு உரிமை நீதான்… நீதான் என் காம கிழத்தி, விருப்ப அடிமை, விளையாட்டு பொம்மை, வடிகால் எல்லாம்….” பால் செம்பை வாங்கி மடமடவென குடித்து கீழே போட்டான்.

னங்.

“எனக்கு எப்பவுமே ரெண்டு மூஞ்சி உண்டு. ஒண்ணு பரமசாது சீனிவாசன். பட்டப்பேரு கூட ‘தயிர்வடை சீனிவாசன்’ அது நா எல்லாரையும் ஏமாற்றும் முகம். இரண்டாவது  மூஞ்சிதான் மெய்யானது. வன்முறை ரசிகன் சீனி. எங்க வீட்டு நாயை யாருக்கும் தெரியாம நொறுக்கி எடுத்திருக்கேன். ஆனா காயம் தெரியாம வீக்கம் இல்லாம நுட்பமா அடிப்பேன். ஆனா யாராவது இருக்கும்போது நாய்க்கு ராஜஉபசாரம்தான் தடவிக் குடுக்றதுதான். பிஸ்கட் ஊட்டிவிடுரதுதான். எனக்கு வயது 28. நிறைய தேவ்டியாகிட்ட போய்ருக்கேன். என் அடி தாங்காம அழுது கும்பிட்டு இருக்காங்க!” சிரித்தான்.

கலவரமுகமானாள். “அப்டின்னா…. இனி…. இனி என்னை அடிப்பீங்களா?”

“இதென்ன அபிஷ்டு மாதிரி கேள்வி? உன்னை மட்டும்தான் அடிப்பேன். நீ நல்ல அப்பன் ஆத்தாளுக்கு பிறந்தவதானே? வாக்கு சுத்தம் உள்ளவதான? (வலதுகையை நீட்டினான்) சத்தியம் பண்ணிக்கொடு. நம்மக்குள்ள நடக்றத நீ யார்கிட்டயும் மூச்சு விடக்கூடாது. சாமிகிட்டக் கூட. மூச்சுவிட்டா என்ன செய்வேன் தெரியுமா? என் பொண்டாட்டி நடத்தை சரியில்லைன்னு எழுதி வச்சிட்டு தற்கொலை பண்ணிப்பேன்….”

சத்தியம் செய்து கொடுத்துவிட்டு, “உங்களுக்கு என்னை பிடிக்கலையா? நா உங்கள மொதமொத பாத்தப்பவே உசுரையே வச்சிட்டேன். நான் எதாவது தப்பு செஞ்சாத்தான என்னை அடிப்பீங்க, எதித்து பேசினாத்தான அடிப்பீங்க, வாய்க்கு ருசியா சமைக்கலைன்னாத்தான அடிப்பீங்க? நான் உங்க மனம் கோணாம நடந்துக்கிரேன்ங்க. என்னை எங்கப்பாவோ அம்மாவோ ஒரு நா கூட அடிச்சதில்லைங்க. சிறு அடி கூட தாங்கமாட்டேங்க. இனி நீங்கதான் என் ஆயுட்கால அடைக்கலம்தான்னு வந்திட்டேன் ப்ளீஸ் அடிக்காதிங்க!”

“சென்டிமென்ட்டா பேசாத தேவாமிர்தத்தையே சமைய பண்ணி போட்டாலும் சரி காலுக்கு செருப்பா கிடந்தாலும் சரி அடிப்பேன் எனக்கு அதிக சந்தோஷம் வந்தாலும் சரி அடி அதிக துக்கம் வந்தாலும் சரி அடி ரொம்பக் கலவரப்படாதே. மொத சில நாள்தான் உனக்கு அடி வலிக்கும். பின்னாடி உனக்கே மரத்துப்போகும் யார் கண்டது? ஒருநா இல்லாட்டி ஒரு நா என் அடிகளை ரசிக்க ஆரம்பிச்சிருவ. நான் அடிக்க மறந்தாலும் ‘எங்க அடிக்காம துன்புறுத்ரீங்க’ன்னு கேப்ப. பேசியது போதும் அம்மாப்பா விளையாட்டு விளையாடுவோம்?”

உமிழ்நீரை திகிலுடன் விழுங்கினாள்.

விசாலாட்சியை படுக்கைக்கு கொண்டு சென்று அமர வைத்தான். அவளது புடவையைக் களைந்து மடித்து மேஜையில் வைத்தான்.

‘பட்!’

வயிற்றில் அடித்தான்.

‘வயித்தைப் பாரு… நல்லா மொழுமொழுன்னு… தொப்புள்ன்னா இதுதான் தொப்புள்!” கையை விட்டு நகத்தால் தொப்புளின் உட்புறம் கீறினான்.

“ஆ!”

“வலிக்குதா? யப்பா…. வலியோட எக்ஸ்பிரஷன் பாத்தாத்தான் மேலமேல அடிக்க எனக்கு மூடு வரும்!”

மேற்சட்டையைக் களைந்தான். “அட! இன்னும் ரெண்டு பால் செம்பு!” மார்புகளை குழந்தைகளை கன்னமாக நினைத்து சடசடவென அடித்தான்.

“உஷ்! அஹ்!”

தலைமுடியை கொத்தாய் பிடித்து இழுத்தான். தலையை கட்டிலில் சாத்தினான்

வன்முறையான உடலுறவு.

தொடர்ந்து ஆலங்கட்டி மழைபோல் நீர்வீழ்ச்சி அறைவுபோல காயமும் படாமல் தடயமும் தெரியாமல் உறவின் போதே அடிகள் தொடர்ந்தன.

உதிரப்போக்கு நீடித்தது.

முகத்தில் எடுத்து பூசிக் கொண்டான். “சபாஷ்டா சீனி நீ எப்டி பர்ஸ்ட் நைட் கொண்டாடனும்னு நினைச்சியோ அப்டியே கொண்டாடிட்டியே…” சிரித்தான்.

விசாலாட்சியின் புட்டத்தில் தாமரைக்கனி போல தட்டினான்.

“விஷ்யம்தான் முடிஞ்சு போச்சுல. எட்டிபடுடி நாயே!”

இரவு முழுவதும் அழுதபடி படுத்திருந்தாள் விசாலாட்சி.

பிளாஷ்பேக்சம்பவம் 2- சம்பவத்தேதி 15.9.1968 இரவு11 மணி

மருந்துவமனை.

விசாலாட்சிக்கு சுகப்பிரசவம். மூன்று கிலோ எடையில் பெண் குழந்தை தொட்டிலில். கடந்த இரண்டு வருடங்களில் விசாலாட்சி சீனியிடம் அடிவாங்காத நாட்களே இல்லை. அவன் அடிக்கும் உத்தி காவல்துறைக்கோ இராணுவத்துக்கோ தெரிய வாய்ப்பில்லை.

வெளியில் அடுத்தவர் மத்தியில் விசாலாட்சி துடுக்கானவள் போலும் இவன்தான் அடங்கி நடப்பது   போலும் நடிப்பான்.

“ஏன் சீனி…. இப்டி பொண்டாட்டிக்கு பயப்படுற… தனிமைல உன்னை அடிக்கிறாளோ விசா…. இருந்தா சொல்லுப்பா… கண்டிச்சு வைக்ரோம்…’’

அசடுபோல் சிரிப்பான் சீனி.

“அப்டி அவ அடிச்சா என்ன… நா வாங்னா என்ன… கட்ன பொண்டாட்டிக்கு இல்லாத உரிமையா? போனவாரம் கூட எதுக்கோ முதுகுல போட்டா பாரு… சொரேர்னு… புள்ளைதாச்சி… வயித்ல என் மக என்ன உருட்டு உருட்ராளோ… பொறுத்துக்கிட்டேன்…. கன்னம்  மாதிரி முதுகு ரெண்டா இருக்கு? இயேசு நாதர் சொன்னாரேன்னு மறுமுதுகு காட்ட….”

“சரியான அம்மாஞ்சிடா நீ!”

பொய்யைக் கூறியது மட்டுமில்லாமல் இரகசியமாய் கண்ணடிப்பான்.

இத்தனை இருந்தும் குழந்தை பிறந்ததும் கண்கள் கணவனைத் தேடின.

“அவர் எங்க?”

“இதோ வந்திருவார்ம்மா. வியாபார விஷயமா அய்யம்பேட்டை போயிருக்கார்!”

புயலாய் உள்ளே பிரவேசித்தான். “மகன்தானே? மகன்தானே?”

“இல்லைப்பா! மக…. மூத்தது மகள்னா ராசி!”

“ஆ… ஆமாமா….”

மென்று விழுங்கினான். வெறியுடன் மனைவியை பார்த்தான். திரும்பினான். “கொஞ்ச நேரம் எல்லாரும் ரூமுக்கு வெளில போய் நிக்ரீங்களா?”

“சின்னஞ்சிறுசுக பேசும்!” விலகினர்.

குற்றுயிரும் குலை உயிருமாய் கிடக்கும் விசாலாட்சியின் காதுகளுக்கு குனிந்தான். பற்களை கடித்தான். சின்ன டெஸிபல்லில்  வெறியாய் பேச எங்கு கற்றுக் கொண்டான்?

“குச்சுக்காரி! குச்சுக்காரி! இன்னொரு குச்சுக்காரிய பெத்துப் போட்டியா?  பொட்டை சனியனை எவன் கேட்டது? அப்டியே நெறிச்சது தெரியாம கழுத்து நெறிச்சு குழந்தையக் கொன்னிரவா?” முஷ்டி மடக்கி அடித்தொடையில் குத்தினான்.

“ஹா… வலிக்குதுங்க… ஆண் குழந்தை பெண் குழந்தை கடவுளோட விருப்பம்தானே? நான் என்னங்க செய்வேன்?”

“எதித்து எதித்து பேசாதடி!” விசாலாட்சியின் உதடுகளை திருகினான். தலைகேசத்துக்குள் ஒளிந்திருக்கும் மேல்காதை கிள்ளினான்.

“அடுத்தக் குழந்தையாவது ஆம்பிளைப்பிள்ளை பெறுவியா?”

“சரிங்க!”

“நீலிக்கண்ணீர் வடிக்காத. மூஞ்சை துடைச்சுக்க. பாத்து பருவிச்சுப் பேசு!”

கதவைத் திறந்து விட்டான்.

குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடனமாடினான்.

“பாத்து சீனி பாத்து. பச்சக்குழந்தை தலை நிக்கல. எதாவது ஆய்ட்ப் போகுது!”

பாசமலர் சிவாஜி போல் பாடினான்.

“ஏன் கதவை பூட்னேன் தெரியுமா அப்பா-அம்மா-அத்த?”

“தெரியாதே!”

“விசா ஆண்குழந்தைதான் பிறக்கும்னு பிடிவாதமா இருந்தா. பெண் குழந்தை பிறக்கனும்னு நான் உலக ஆசையா இருந்தேன். முடிவுல நான்தான் ஜெயிச்சேன். என் விருப்பப்படி பெண் குழந்தை பெத்துக்குடுத்த விசாவுக்கு கன்னம் நிறைய முத்தம் முத்தம். இப்பவே அடவான்ஸ் பண்ணி வச்சிட்டேன்… அடுத்ததும் பெண் குழந்தைதான பெத்துக் குடுக்கனும்னு. இல்லையா விசா?”

தொடையும் காது மேல் நுனியும் வலித்தன. “ஆ…  ஆமா…”

“உன்னை மாதிரி எல்லா ஆம்பிளைகளும் இருந்தா இந்தியா எங்கயோ போய்டும் சீனி!”

சிரித்தான் சீனி.

பாம்பு சிரிக்குமா? முதலை சிரிக்குமா? டைனசார் சிரிக்குமா? கரடி சிரிக்குமா? சாத்தான் சிரிக்குமா? இதோ சீனி வடிவில் சிரிக்கின்றனவே.

அனைவரும் விலக-

சீனி விசாலாட்சிக்கு குனிந்தான். “எப்டி நம்ம நடிப்பு? பாராட்ட மாட்டியே…. எல்லாரையும் நடிச்சு ஏமாத்ற சொகம் உன் கூட பத்து தரம் படுத்து எந்திரிச்சாலும் கெடைக்காது… நான் சாத்தான் தேசத்து ஆஸ்தான நடிகன்…. பல நா திருடன் ஒரு நா அகப்படுவான அதமாதிரி உன் குட்டும் வெளியாகும்டான்ற. நீ சத்யம் பண்ணிக் குடுத்தபடி மௌனம் காத்தன்னா என் குட்டு உலகம் அழியுற வரைக்கும் அப்பட்டமாகாது. பேன்னு முழிக்காம குழந்தைக்கு பாலைக்குடுடி!” மார்பகத்தை தட்டியபடி வெளியே வந்தான்.

வெளியே வந்ததும் அவன் முகம் சாத்வீகமானது. “குழந்தைய பராமரிக்ற வழிகள் சொல்லிக் குடுத்துட்டு வந்தேன்!” காந்திஜி போல் பேசினான்.

(-தொடரும்…)

முந்தைய பகுதி – 4 | அடுத்த பகுதி – 6

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...