புதுச்சேரி, திருவாண்டார் கோவில், அரசு தொடக்கப் பள்ளியில் 18-02-2026 அன்று நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் கலைமாமணி மு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.



நிகழ்வை பள்ளியின் தலைமையாசிரியர் பு.விசாகன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில், பள்ளித் துணை உதவி ஆய்வாளர் அ.புவியரசன், எழுத்தாளர் சாலை செல்வம், ‘சிறுவர் பக்கம் புத்தகக் கடை’ நிறுவனர் நாகேஷ், புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ப.திருநாவுக்கரசு, ஆய்வாளர் சந்துரு மாயவன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
புத்தகத்திருவிழாவில் சிறுவர்களுக்கான நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் உற்சாகத்தோடு புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இவ்வாறாக, விழா இனிதே நிறைவுற்றது.
