புதுச்சேரி, செயின்ட் தெரேஸ் வீதி, வண்ண அருவி ஓவியக் கலைக் கூடத்தில் ஓவியர், எழுத்தாளர் சீராளன் ஜெயந்தன் அவர்களின் வண்ண ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

நிகழ்வுக்குத் தலைமை விருந்தினராக உலகப் புகழ் ஓவியர் ஶ்ரீதரன் அவர்களும் எழுத்தாளர், கல்கி இதழின் மேனாள் துணை ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூரியா மற்றும் புதுவை பொதுப்பணித்துறை, மேனாள் கண்காணிப்புப் பொறியாளர், கலைமாமணி மு. பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினர்.

ஓவியர்கள் சீராளன் ஜெயந்தன், மாதவி மோகன் மற்றும் லின்சி ஜோசி ஆகியோரின் வண்ண ஓவியங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. நிகழ்வில் கவிஞர் மனுஷி, மொழிபெயர்ப்பாளர் சீனு.தமிழ்மணி, ஓவியர்கள் ஆனந்த வேலு, முரளிதரன், புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ப.திருநாவுக்கரசு, ஓவியர் சரவணன், ஓவியர் காமராசு, புகழேந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த கண்காட்சி 20-02-2026 முதல் மார்ச் 1, 2026 வரை நடைபெறும்.
