வாழைத்தண்டு”.. ஒளிஞ்சிருக்கும் சீக்ரெட்

 வாழைத்தண்டு”.. ஒளிஞ்சிருக்கும் சீக்ரெட்

வாழைத்தண்டு”.. ஒளிஞ்சிருக்கும் சீக்ரெட்

காய், இலை, பூக்களையும்தாண்டி, அதன் தண்டிலும்கூட சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்றால் அது இந்த வாழைத்தண்டினால் மட்டுமே.. வாழையில் எல்லாமே மருத்துவம் – மகத்துவம்..!

வாழைத்தண்டுகளில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 அடங்கியுள்ளது.. இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது.

எத்தனையோ நன்மைகள் இந்த வாழைத்தண்டில் இருந்தாலும், 3 பிரதான பிரச்சனைகளுக்கு இந்த வாழைத்தண்டு பயன்படுகிறது. முதலாவதாக, சிறுநீரக கற்கள் கரையவும், குணமாகவும் இந்த வாழைத்தண்டைவிட வேறு சிறந்த உணவு கிடையாது. சிறுநீரகக் கோளாறுகளுக்கு பரவலாக பரிந்துரைக்கப்படும் பிரதான உணவு இந்த வாழைத்தண்டு ஜூஸ்தான்..

மோர் + லெமன்: வெறும் வாழைத்தண்டு ஜுஸ் குடிக்க சிரமமாக இருந்தால், மோர், ஆப்பிள் ஜூஸ் அல்லது எலுமிச்சைச் சாறு இவைளுடன் சேர்த்து குடிக்கலாம். வாழைத்தண்டு சாற்றுடன், எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கலாம். வாழைத்தண்டில் பொட்டாசியம் உள்ளது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இவை இரண்டும் இணைந்து சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும். இந்த தண்டில் உள்ள சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. சிறுநீரக கற்கள் விரைவில் கரைந்துவிடும்.. வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால், சிறுநீரக கற்களை சேரவிடாமல் தடுத்துவிடும். சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலும் அதை குணப்படுத்த இந்த தண்டின் சாறு உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகள் வரப்பிரசாதம்தான் இந்த வாழைத்தண்டு.. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது. இன்சுலினை இந்த தண்டு மேம்படுத்த உதவுவுகிறது.. அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதன் சாற்றை வடிகட்டாமல் குடித்தால், நார்சத்து அதிகமாகவே கிடைக்கும் என்கிறார்கள்.. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வது தடுக்கப்படும்.

ரத்த அழுத்தம்: இந்த வாழைத்தண்டு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடியது.. இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்து, ரத்தசோகையையும் குணமாகும்.. வாழைத்தண்டை சாப்பிட்டு வந்தால், உடலில் அதிக ரத்த அழுத்தத்தை கொண்டிருப்பவர்கள் கட்டுக்குள் வைக்க முடியும்.. ரத்த அழுத்த பிரச்சனையால் உண்டாகும் மோசமான விளைவுகளை தடுத்து நிறுத்தும்.. தண்டு சாறு: அதேபோல, வாழைத்தண்டு சாறு குடித்தால், சர்க்கரை மற்றும் கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதுடம் தடுத்து நிறுத்தப்படும்.. கொழுப்பை உடலில் இருந்து நீக்க துணைபுரிகிறது.. கொழுப்பு மட்டுமல்லாமல், வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும். நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடித்தால் தீர்வு கிடைக்கும்.. வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும். வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாள டைவில் குணமாகும். உடல் பருமன்: தேவையற்ற உடல் பருமனை இந்த ஜூஸ் குறைக்கிறது.. நார்ச்சத்து அதிகமுள்ளதால் ஒன்று அல்லது இரண்டு கப் ஜூஸ் குடித்தாலே வயிறு நிரம்பிவிடும்… சீக்கிரத்தில் பசி எடுக்காது. இதுவும் உடல் எடை குறைய உதவுகிறது. சிறிது இஞ்சியை இந்த ஜூஸுடன் சேர்த்து குடித்து வந்தால் வயிற்றிலுள்ள கொழுப்பு குறைத்து செரிமானத்தை எளிதாக்கும். வாழைத்தண்டை காயவைத்து, பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் காமாலை நோயும் குணமாகும்.. கல்லீரலும் பலப்படும். இதிலுள்ள வைட்டமின் A, C இரண்டுமே தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது… இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலிகள் என பிற நோய்களுக்கும் வாழைத்தண்டு மருந்தாகிறது. எப்படி சாப்பிடலாம்: வாழைத்தண்டு குளிர்ச்சி என்பதால், அதற்கேற்றவாறு மற்ற குளிர்ச்சியான உணவுகளை குறைத்து கொள்ளலாம். இந்த தண்டினை கூட்டு செய்யலாம் – பொரியல் செய்து சாப்பிடலாம் – பச்சையாக சாலட் செய்தும் சாப்பிடலாம் – அதேசமயம் ஜூஸாக்கியும் சாப்பிடலாம். சிலர் இதில் துவையல் செய்வார்கள்.. அடுப்பில் வாணலை வைத்து எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மல்லி விதை போட்டு வறுத்து, பிறகு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். பிறகு தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆறிய பிறகு பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்தால் துவையல் ரெடி. அற்புத மருந்து: இந்த தண்டு சிறுநீரை அதிகரிக்க செய்யும் என்பதால், வயதானவர்கள் வாழைத்தண்டை உணவில் , குறைவாக சேர்த்து கொள்ளலாம் என்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், வாழைத்தண்டு யாரையும் வாழவே வைக்கும்..!!

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...