விஜய் சேதுபதி வசனத்தில் ‘குலசாமி’ வெளியீட்டுக்குத் தயார்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள  ‘குலசாமி’ திரைப்படத்தில் விமல், தான்யா ஹோப் நடிக்கிறார்கள். MIK Productions Private Limited தயாரிப்பில், ‘பில்லா பாண்டி’ படத்தை இயக்கிய குட்டிப்புலி சரவணசக்தி இயக்குகிறார்.

இயக்குநர் சரவண சக்தி பேசும்போது, “குலசாமிக்கு சிறப்பாகவசனம் எழுதிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு முதல் நன்றி. அவர் வசனம் எழுதி தந்ததால் தான் இப்படம் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் சிறப்பான காவல் அதிகாரியாக இருந்த ஜாங்கிட் அவர்கள் எங்களுக்காக இப்படத்தில்  நடித்திருக்கிறார் அவருக்கு எங்கள் நன்றி. மிகப்பெரிய போராட்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளது. நல்ல கருத்துள்ள படத்தைத் தந்துள்ளோம். படத்திற்கு  உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி” என்றார்.

விமல், தன்யா ஹோப் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், இயக்குநர் சரவண சக்தியின் மகன் சூர்யா வில்லன் வேடத்தில் அறிமுகமாகியுள்ளார்.
வைட் ஆங்கில் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனி ஒருவன் எடிட்டர் கோபி கிருஷ்ணா எடிட்டராகவும், ஜீ  தமிழ் ராக் ஸ்டார் பின்னணிப் பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்கள். 

கனல் கண்ணன் சண்டை பயிற்சி அமைத்துள்ளார். ஆக் ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சிறப்பு தோற்றம் • S R  ஜாங்கிட் IPS
தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு  – “Wide angle” ரவி ஷங்கர்
கலை – ஜெயக்குமார்
படத்தொகுப்பு – கோபிகிருஷ்ணன்
இசை – VM மகாலிங்கம்
சண்டை – கணல்கண்ணன்
ஒலி வடிவமைப்பு – R.கிருஷ்ணமூர்த்தி
பாடல்கள் – மதன் கார்க்கி, சிநேகன், வா.கருப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!