ரூ. 3000 கோடி வருவாயை ஈட்டி, தமிழ் சினிமா சாதனை
“தமிழ் சினிமா துறை 2022ம் ஆண்டில் ரூபாய் 3,000 கோடி வரை வருவாயை ஈட்டி உள்ளது. மொத்தத்தில் தென்மாநில சினிமா துறை 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி உள்ளது” என இந்தியத் தொழில் கூட்டமைப்பின் ‘தக்சின்’ குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சி.ஐ.ஐ. எனும் இந்திய தொழில் கூட்டமைப்பின் தக்சின் குழு நிர்வாகிகள் தியாகராஜன், சுகாசினி, தனஞ்செயன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
அதில் ‘இந்த மாதம் 19, 20ஆம் தேதிகளில் தக்சின் என்ற தலைப்பில் சினிமா தொடர்பான இரண்டு நாட்கள் கருத்தரங்கம் சென்னையில் நடக்கவிருக்கிறது. இதில் சினிமா துறை எதிர்கொள்ளும் சவால்கள், தொழில்நுட்பம், சிறிய பட்ஜெட் படங்களின் எதிர்காலம் எனப் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடக்கின்றன. இதில் அறுபதுக்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் எண்ணூறுக்கும் அதிகமான சினிமா சார்ந்த பிரபலங்கள் மற்றும் பிரதிநிதிகள் பற்கேற்கிறார்கள்.
வரும் 19ஆம் தேதி கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். கருத்தரங்கின் நிறைவில் மத்திய தகவல் ஒலிபரப்பத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் பங்கேற்கிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தென்னிந்திய சினிமா துறை சம்பந்தமாகப் பேசிய தக்சின் குழு,
“கடந்த 2022ஆம் ஆண்டு தமிழில் 223 படங்கள் தெலுங்கில் 227 படங்கள் உட்பட தென்மாநிலங்களில் மட்டும் 800 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதன் வாயிலாக தமிழ் சினிமா துறை 3000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. தென்மாநில சினிமா துறை பத்தாயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டி உள்ளது. தமிழ சினிமா எதிர்பார்த்த வருவாயைவிட அதிக வரவாயை ஈட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது என்ற தகவலைத் தெரிவித்தனர்.