கண்ணியம் நிறைந்த எழுத்தாளர் கணியூரான் || காலச்சக்கரம் சுழல்கிறது-11

 கண்ணியம் நிறைந்த எழுத்தாளர் கணியூரான் || காலச்சக்கரம் சுழல்கிறது-11
கவியரசர் கண்ணதாசனுடன் கணியூரான்

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.

கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாசறையில் வளர்ந்த பண்பாளர், இலக்கிய உலகிற்குக் கிடைத்த ஒரு இனிய காலப் பெட்டகம். நாடகத் துறையை  விரும்பி நாடகங்களை எழுதி, இயக்கி, தயாரித்து நடித்த இவர் 40 நாடகங்கள் வரை எழுதியிருந்தாலும் ஏனோ திசை மாறி ஆன்மிக உலகிற்குச் சென்று விட்டார்.

எழுத்தாளர்கள் எந்தத் துறையிலும் வெற்றி பெறலாம் என்பதற்கு இவரே உதாரணம். எண்ணும், எழுத்தும் தன் இரு கண்கள் எனக் கூறும் இவர், மலையாள மொழியில் மேல்பத்தூர் நாராயண பட்டதிரி எழுதிய நாராயணீயம் வரை எழுதித் தமிழுக்குத் தொண்டு செய்த ஒரு தரமான படைப்பாளி.

எழுத்தாளர் கணியூரான்

உடுமலைப்பேட்டை அருகில் உள்ள கணியூரை;ச சொந்த ஊராகக் கொண்ட இவர் ஊரையே முன்னிலைப்படுத்திக்கொண்டு கணியூரான் என்ற புனை பெயரிலேயே இன்று வரை வலம் வந்து கொண்டிருப்பவர். இவரது எழுத்துக்கள் எல்லாமே இலக்கிய நயமாக இருக்கும்.

கோவை மாவட்டத்துக்காரரான இவர் தட்டச்சுத் துறையில் பணியாற்றினாலும் இவருக்கு ஆர்வம் வந்தது ஆன்மிக உலகில்தான். நடராஜன் என்ற தன் உண்மைப் பெயரை இவர் எதிலுமே பதிவு செய்யாமல் உலா வரும் படைப்பாளியான இவர் அகவை முதிர்ந்தவர் மட்டுமல்ல, அறிவிலும் முதிர்ந்தவர்.

கடந்த காலச் சிந்தனையுடன், நிகழ்காலத்தில் வலம் வரும் இவர், எதிர்காலத்தைப் பற்றியும் இறைவனின் பெருமைகளையும் மட்டுமே சிந்தித்துச் செயலாற்றும் ஆன்மிக உலகின் ஒரு நவீன ரோபோ.

இவரைப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு ஆன்மிகத்தின் அற்புதங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகவே ஏற்படும். புகழ்பெற்ற ஆன்மிக எழுத்தாளராகிய இவர் கடல் போன்ற மனம் படைத்தவர். கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பார்வை பட்டதாலேயே இவர் பத்தரை மாற்றுத் தங்கமானார்.

சரஸ்வதி கடாட்ஷம் நிரம்பப் பெற்ற இவருக்கு ஆனந்தவல்லி எனும் ஒரு நல்ல குணவதி வாழ்க்கைத் துணைவியாக அமைந்ததால் இன்றுவரை இவர்கள் ஐஸ்வர்யமாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறார்கள்.

நான் நேசிப்பது கண்ணியம் நிறைந்த எழுத்தாளர் இனிய நண்பர் கணியூரானைத்தான்.

(தொடரும்)

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...