பெண்களே… தயக்கம் வேண்டாம்

வேண்டாத கர்ப்பமா? உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வாங்க. உங்களுக்கு 100% பாதுகாப்பான இடம் அரசு மருத்துவமனைகள். இங்கு தேவையற்ற கர்ப்பத்தைக் கருக்கலைப்பு செய்வதுடன் உங்கள் ரகசியமும் காக்கப்படும்.

மருத்துவர்கள் நாங்கள் நீதிபதிகள் அல்ல. உங்கள் சூழலை judge பண்ற தகுதி எங்களுக்கு இல்லை. மாறாக உங்களுக்கு உதவத் தயாராகவே நாங்கள் இருப்போம். ரகசியம் காக்கப்படும். பொதுத் தளத்தில் உங்கள் பெயர், முகவரி வராது.

பல நேரங்களில் AR entry போடுவோம். அது உங்கள் பாதுகாப்பிற்கே ஒழிய, போலீசை கொண்டு வந்து உங்க வீட்டு வாசலில் நிறுத்த அல்ல. Under18 cases, unmarried casesக்கு எல்லாம் AR entry போடுவோம். உடனே இது ஏதோ உங்களுக்கு எதிராக FIR போட்டது போல் எண்ண வேண்டாம்.

உங்கள் நலன் மீது அரசுக்கு அக்கறை உள்ளது. அதை நிறைவேற்ற அரசு மருத்துவர்கள் உதவுவார்கள்.

தேவையற்ற கர்ப்பம் என நினைக்கும் பட்சத்தில் கூடிய விரைவிலேயே அரசு மருத்துவமனைக்கு வாங்க. முதல் மூன்று மாதக் கருக்கலைப்பு ( 12 வாரங்களுக்குள் ) என்பது பெரிய ஆபத்துகள் அற்றது. ஆனால், இரண்டாம் மாத, மூன்று மாதக் கருக்கலைப்பு (12 – 24 வாரம்) என்பது ஆபத்துகள் நிறைந்தது. அதனால் மகப்பேறு மருத்துவர்களுக்கும் இது ஒரு சவால் நிறைந்த பணி. இந்த நிலைக்கே வரக்கூடாது நாம்.

கர்ப்பம் தரிப்பதில் ஆணுக்கும் இங்கு பங்குண்டு. ஆக உங்களை மட்டும் இங்கு யாரும் குறை கூறப் போவதில்லை. அதனால், வேண்டாத கர்ப்பமா ? உடனே அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு வாங்க. தைரியமா வாங்க.

இப்பதிவு ஏன் எனில் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் வேறு வழியின்றி 5மாதத்தில், 6 மாதத்தில் வந்து, ‘மேடம் கருக்கலைப்பு பண்ணி விடுங்க மேடம்; ஏமாந்துட்டேன் மேடம்’ என வந்து நிற்கும் பெண்களுக்கு உதவ முடியா சூழலில் நிற்கிறேன் இன்றும்.

இந்நிலை வேண்டாம். உங்களுக்கு உதவ அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. தைரியமா வாங்க.

மருத்துவர் அனுரத்னா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!