இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்

 இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து இயற்கை விவசாயப் பணிகளையும் முன்னெடுத்துச் சென்றவர் `தெலுங்கானாவின் சிறுதானிய மனிதன்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் பி.வி.சதீஷ் (77). இவர் உடல்நலக்குறைவால் 19-3-2023 அன்று காலமானார்.

இவர் தினை மறுமலர்ச்சி மற்றும் இதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த சதீஷ், பல ஆண்டுகளுக்கு முன், தினை பயிர்களை மட்டுமே அடிப்படையாக வைத்து, பெண் விவசாயிகளால் நடத்தப்படும் உள்ளூர் பொது வினியோக முறையை அமைத்தவர்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாற்று உணவுப் பயிரான தினை சாகுபடியில் ஈடுபட்டதற்காக ‘இந்தியாவின் தினை மனிதர்’ என்று அழைக்கப்பட்டவர் சதீஷ்.

இந்த மகத்தான பணிக்காக இவரது நிறுவனம் பல விருதுகளை வென்றுள்ளது. ஐக்கிய தேசிய வளர்ச்சித் திட்டம் வழங்கிய பூமத்திய ரேகைப் பரிசை டெக்கான் டெவலப்மண்ட் சொசைட்டி பெண்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.

பி.வி.சதீஷ் 1983 ஆம் ஆண்டு ஹதாராபாத்தில் டெக்கான் டெவலப்மண்ட் சொசைட்டியை நிறுவினார். மேலும் வறட்சியான மேடக் மாவட்ட பகுதியின் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் பாரம்பரிய பயிர்களைப் பாதுகாக்கவும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.

நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிப்படைந்திருந்த சதீஷ், நேற்று காலை ஹைதராபாதில் காலமானார். சமூக நல ஆர்வலர்கள், சூழலில் ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...