தாய்மையை வென்ற கருணை


ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கு கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு மேடையில் அந்த கொலைகாரனின் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது.
தூக்கு மேடைக்கு எதிரே கொலையுண்டவரின் தாயார் அமைதியாக அமர்ந்திருந்தார். காரணம், தூக்குக்கயிறு மாட்டப்பட்டு கொலையாளி நிற்கவைக்கப்பட்டிருக்கும் நாற்காலியை கொலையுண்டவரின் தாயார் உதைத்துத் தள்ளி கொலையாளியின் மரண தண்டனையை நிறைவேற்றுவதுதான் அந்நாட்டு வழக்கமாகும்.
மரண தண்டனையை நிறைவேற்றும் நேரம் நெருங்குகையில் கொலையுண்டவரின் தாயார் தூக்கு மேடையில் மெல்ல ஏறி கொலையாளி நிற்கும் நாற்காலியை எட்டி உதைப்பதற்குப் பதில் அந்தக் கொலையாளியின் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த தூக்குக் கயிறை அவிழ்த்துவிட்டு உன்னை மன்னித்து விட்டேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

நடந்தது என்ன?
இளைஞர்கள் இருவரும் தெருவில் சண்டையிட்டனர், பலால் சமையலறை கத்தியை எடுத்து அப்துல்லாவை குத்தினார். அப்துல்லா கொல்லப்பட்டார்.
ஈரான், மஸ்னாதரன் மாகாணத்தில் காஸ்பியன் கடலுக்கு அருகிலுள்ள வடக்கு நகரமான நூரில் மக்கள் கூடியபோது பலாலின் தாயார் கூகாப், தன் மகன் வெளியே கொண்டுவரப்படுவதற்கு முன் தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தார். அவளிடம் எந்த சக்தியும் இல்லை.
பலால் தலை மூடப்பட்டு, கழுத்தில் கயிறு போடப்பட்டது. அவர் அமைதியாகச் செல்வதற்கு முன்பு சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பம் வெளியே வந்தது. அவரது தாயார் கூட்டத்தில் உரையாற்றினார். தனது மகனை இழந்ததில் இருந்து தான் ஒரு கனவாக வாழ்ந்து வருவதாகவும், கொலையாளியை மன்னிக்க முடியவில்லை என்றும் கூறினார்.
பிறகு பலாலை நோக்கி நடந்து சென்று நிற்க ஒரு நாற்காலி கேட்டாள். அவள் மேலேறி, பலாலை அறைந்து, “மன்னிக்கிறேன்” என்றாள். அவளும் அப்துல்லாவின் தந்தையும் கயிற்றைக் கழற்றினர்.

பலாலின் குடும்பத்தினர் விரைந்து வந்து, அவர்களைக் கட்டிப்பிடித்து, அவர்கள் செய்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
இங்கு புகைப்படமாக காட்சி படுத்தப்பட்டிருப்பது, சாவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் தன் மகனைக் கொன்றவனின் மரண தண்டனையை நிறைவேற்றாமல் தன் முடிவை மாற்றி மன்னிப்பு அளித்த ஒரு அற்புதமான தாயின் கருணையைக் காட்டுகிறது.

தன்னைப் போன்று இன்னொரு தாய் துயரப்படக்கூடாது என்று அவர் நினைத்ததே அதற்குக் காரணம். என்னதான் கொலையாளி என்றாலும் அவனும் ஒரு தாய்க்கு மகன் தானே.
கொலைகாரனுடைய தாய் கொலையுண்டவரின் தாயைக் கட்டி அழுதபோது எடுத்த புகைப்படம்தான் இது. இறுதியில் தாய்மையே வென்றது.
இந்தச் சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆனாலும் தாய்மையின் கருணை மறக்கமுடியாதது.