வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!

 வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!

விஜய் ஆன்டணி நடிப்பில் பெஸ்டாக அமைந்த படம் பிச்சைக்காரன். தற்போது பிச்சைக்காரன் 2 படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தை விஜய் ஆன்டணியே இயக்கி, தயாரித்து, இசையமைத்து நடிக்கவும் செய்துள்ளார். படத்தின் சூட்டிங்கின்போது பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதிலிருந்து மீண்டு வந்த விஜய் ஆன்டணி, தற்போது படத்தின் சூட்டிங்கை முடித்து, அடுத்த மாதம் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார். படத்தின் முதல் பாகம் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்தப் படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்

படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை இன்றைய தினம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது பிக்கிலி என்ற கேரக்டரை உருவாக்கியிருந்தார். சமீபத்தில் தான் படத்தில் ஆன்டி பிக்கிலி என்று வெளிப்படுத்தினார்.

பிக்கிலி என்றால் முன்னதாக ஏழைகளை சுரண்டி கொழிக்கும் நபர்களே தான் அவர்களுக்கு அந்தப் பெயரை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதே கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் வீடியோ பாடலாகவே அந்தப் பாடலை வெளியிட்டுள்ளார் விஜய் ஆன்டணி.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...